Tuesday, August 27, 2013

BOOKS ON POSITIVISM


பாஸிட்டிவ் நூல்கள்


கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக நான் அடிக்கடி நெப்போலியன் ஹில்லின் Think And Grow Rich என்னும் புத்தகத்தைப் பற்றிச் சொல்லி வந்திருக்கிறேன். 
சில ஆண்டுகளுக்கு முன்னர் Rich Dad Poor Dad என்னும் புத்தகம் வந்தது. ராபர்ட் கீயோஸாக்கி என்பவர் எழுதியது. 
இந்த நூலை ஒரு Ground Breaker என்று சொன்னார்கள். 
Think And Grow Rich என்னும் நூல் இருபதாம் நூற்றாண்டில் வெளியாகிய நூல்களில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய நூல்களில் ஒன்று. சிலருடைய கருத்துப்படி அதுதான் மிக அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கும் மூல நூல் ஒன்று உண்டு - Law Of Success. நல்ல தடிமனான புத்தகம். இது மூல நூல் என்றால், Think And Grow Rich-சுக்கு வழி நூல்கள் பல இருக்கின்றன. 
Rich Dad Poor Dad நூல் வந்த சில ஆண்டுகளிலேயே அது MultiMillion Best Seller நிலையை அடைந்தது.

அதைத் தொடர்ந்து இன்னும் சில நூல்களை கீயோஸாக்கி எழுதினார். 

ஒரு நூல் விமரிசகர் இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற புத்தகமாக எப்படி Think And Grow Rich விளங்கியதோ, அது போலவே இருபத்தோராம் நூற்றாண்டுக்கு Rich Dad Poor Dad நூல்", என்று எழுதியிருந்தார். 
இது ஓர் அருமையான Catch Phrase-ஆக விளங்கியது. இந்த வரியை 
எங்கும் பார்க்கலாம். அப்படிப்பட்ட விளம்பரம். 
1997-ஆம் ஆண்டு வெளியாகியது அந்நூல். 
இப்போது சில ஆண்டுகள்தாம் ஆகியிருக்கின்றன. இருபத்தோராம் 
நூற்றாண்டில் சில ஆண்டுகளே பூர்த்தியாகியிருக்கின்றன. 
ஆனால் அந்த நூல் Rich Dad Poor Dad இப்போதெல்லாம் அதிகமாகப் 
பேசப்படுவதில்லை. 

Think And Grow Rich இப்போது புதிய உருவில் வந்துவிட்டது. 

என்னிடம் கிட்டத்தட்ட ஐந்நூறு PMA - Positive Mental Attitude சம்பந்தப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றன. 

Og Mandino, Zig Ziglar, Maxwell Maltz, Wayne Dyer, Tom Peters, Steven Covey, Anthony Robbins, Denis Waitley, Norman Vincent Peale, Drs. Shuller, Canfield And Hansen, Clement Stone, Lawrence Peter, Michael Korda, Edward Bono, என்று நூலாசிரியர் பட்டியல் நீண்டுகொண்டே போகும். 

இவர்கள் எழுதியவற்றில் மிகச் சிறந்த நூல்களாகப் பார்த்து வாங்கி 
சேர்த்திருக்கிறேன்.

As A Man Thinketh நூல்கூட இருக்கிறது. 1902-ஆம் ஆண்டில் வெளிவந்த நூல். சிறிய நூல். James Allen என்பவர் எழுதியது. பைபிலில் உள்ள 
ஒரு வாசகத்தையே - For as he thinketh in his heart, so is he: - தலைப்பாகவும் 
சித்தாந்தமாகவும் கொண்டுள்ள நூல். PMA நூல்களில் முதல் வரிசையில் வைத்தும்  
காலத்தால் முற்பட்ட நூலாகவும் கருதப்படுவது இந்நூல். நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட Samuel Smiles-ஸின் நான்கு 
நூல்களும்கூட என்னிடம் இருக்கின்றன. 

இப்போது வந்துள்ள புத்தகங்களில் சில......
The Monk Who Sold Hi Ferrari, Maxwell Maltz-ஸின் Psycho-Cybernetics - 
நான்கு பகுதிகள், David Posen-னின் Always Change A Losing Game, Steve Chandler-இன் 100 Ways to Motivate Yourself: Change Your Life Forever. 
Its Always Too Soon To Quit, Dare To Fail என்னும் புத்தகங்கள் கொஞ்சம் 
வித்தியாசமானவை. இவற்றில் அடிக்கோடு - Bottom Line என்பதைத்தான் 
அப்படிச் சொல்லியிருக்கிறேன் - தோல்வியைக் கண்டு அஞ்சாமல், கஷ்டத்தைக் கண்டு சலிக்காமல் விடாமுயற்சியோடு மன உறுதியோடு சவால்களை எதிர்நோக்கி வெற்றி பெறமுயல்வது. இதில் குறிப்பிடத் தக்க நூல், Dr.Schuller-ரின் Tough Times Dont Last, Tough People Do. When The Going Gets Tough, The Tough Get Going என்பதே இதன் சித்தாந்தம்.
இவையெல்லாமே மிகவும் பயனுள்ள புத்தகங்கள்தாம். பலருக்கு 
உதவியிருக்கின்றன.
பயத்தைப் போக்குவதற்கு, டிப்ரெஷனைப் போக்குவதற்கு, தாழ்வு 
மனப்பான்மையைப் போக்குவதற்கு, ஸ்ட்ரெஸ்ஸைப் போக்குவது...... இப்படி ஏராளமான Genres. How To...... வரிசையில் எண்ணிகை அற்ற புத்தகங்கள். 
'........ For Idiots' என்ற வரிசையில் பல புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
ஆனால் மலேசியாவில் உள்ள தமிழ் புத்தகக் கடையில் தமிழர்கள் 
என்ன மாதிரியான புத்தகங்கள் வாங்குகிறார்கள், தெரியுமா?

அன்புடன்

ஜெயபாரதி

No comments:

Post a Comment