Sunday, August 25, 2013

YAVANA MADHU


யவனர் தந்த மது-#1



தமிழர்களிடம் பலமாதிரியான மதுவகைகள் இருந்திருக்கின்றன. சங்க இலக்கியத்தில் அரியல், அரி, நறா, நறவு, கள், மது, பிழி என்று விதம் விதமாக இருந்தன. பழம், அரிசி, கேழ்வரகு, தேன், முதலிவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டவை தவிர, தென்னங் கள், பனங் கள், ஈச்சங் கள்,  மாதுளம் கள் என்று பல வகை.
இருப்பினும் ஏன் யவனத்திலிருந்து மதுவை ஏராளமாக இறக்குமதி 
செய்தார்கள் என்பது குறித்து ரொம்ப நாட்களாக எனக்கு அதிசயமும் ஐயப்பாடும் இருந்துவந்தது. 
இது குறித்து இணைய கிரேக்கர்கள் சிலரிடம் கேட்டேன். 
அவர்களிடம் இருந்த சிறந்த பழங்கால மதுவகைகளைப் பற்றி விசாரித்தேன்.
குறிப்பாக தேன், திராட்சை ஆகியவற்றைப் பற்றி விசாரித்தேன். 
அவர்கள் கொடுத்த தகவல்களைத் திரட்டி, தொகுத்து இணைத்துத் 
தந்திருக்கிறேன். 

கிரேக்கத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விசேஷமான மண்வளம் உண்டு. அது ஒரு தீவு. லெஸ்போஸ் என்னும் பெயர். 

லெஸ்போஸில் ஒரு மிகச் சிறப்பான திராட்சை இருக்கிறது. 
விசேஷமான மணமும் ருசியும் மிகுந்தது. 
திராட்சை மது செய்யும் இடங்களில் இரண்டு ஆள் உயரமுள்ள குதிர்கள் வைத்திருக்கின்றனராம்.
அவற்றின் அடிப்பாகத்தில் மூடவும் திறக்கவும் முடியக்கூடிய துவாரங்கள் உண்டு. 
  லெஸ்போஸ் திராட்சை நன்றாகக் கனிந்ததும் அவற்றை அந்தக் குதிருக்குள் கொட்டுவார்களாம். மேலும் மேலும் கொட்டிக்கொண்டே இருப்பார்கள். 
மேலேயுள்ள திராட்சைகளின் கனத்தால் கீழேயுள்ள கனிந்த திராட்சைகளில் கசிவு ஏற்படும். அந்தக் கசிவு சாறு குதிருக்கு அடியில் இறங்கி துவாரங்களின் வழியாக வெளியில் வரும். 
மேலேயுள்ள பழங்களிலும் சாறு கசிந்து பல்லாயிரக்கணக்கான 
திராட்சைகளின் கசிவு சாற்றோடு சேர்ந்து இறங்கி வரும். 
மற்ற இடங்களில் மாதிரி திராட்சைப் பழங்ளைப் பெரிய தொட்டிகளில் கொட்டிவைத்து, தொட்டிகளுக்குள் ஆட்கள் வெறும் காலோடு குதித்து, தறுக் புறுக் என்று மிதித்து துவம்சம் செய்து சாற்றைப் பிழிவதில்லை. 
லெஸ்போஸ் சாறு, கனிந்த பழங்களிலிருந்து தானாக ஊறிய கசிவு. 
இந்தக் கசிவு சாற்றைக் கை படாமல் எடுத்து அம்·போரே எனப்படும் 
ஜாடிகளில் மூடிவைத்து நொதிக்க விடுவார்களாம். நொத்தித்து வரும் மது கெடாமல் இருப்பதற்கு ஏதோ சேர்ப்பார்களாம்.
இந்த மது ஜாடிகளைக் கப்பல்களின் அடியில் உள்ள Hold-களில் வைத்துப் பங்கடவாகப் பதவிசாகத் தமிழ் நாட்டுக்குக் கொண்டுவந்து, "யவனர் தந்த வினைமான் நன்கலங்களில் ஊற்றி ஊற்றி யவனப் பெண்கள் ஏந்தி ஏந்தி கொடுக்க கொடுக்க மாந்தி மாந்தி மகிழ்வோம் நாமே" என்று நம்ம ஆட்கள் திளைத்திருக்கின்றனர். 

இன்னொரு மதுவும் பேர்போன மது.........

               $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments:

Post a Comment