Monday, August 5, 2013

FROM AGATHIYAR-06082013

மூளைப் புகைச்சல்

அன்பர்களே,

Brain Fog என்றொரு நிலை உண்டு. 
மறதியிலேயே பலவகை உண்டு. 
"என்னாச்சூஊஊஊ...... விழுந்துட்டனா...... பின்மண்டயில அடிபட்டுச்சா..... அங்கதான மெடல்லா ஆப்லங்காட்டா இருக்கு..... டெம்பரரி மெமரி லாஸ் 
ஏற்படும்...... ரெண்டு நாளைல மாறிரும்....." என்பதுகூட ஒருவகைதான்.
பதினைந்து நிமிடத்துக்குமே எதுவும் நினைவில் இல்லாமல் போவதையும், அதற்காக உடல் முழுவதும் லிஸ்ட் போட்டுக்கொள்வதையும் Gajini Syndrome 
என்று பெயர் வைத்து, அதைப்பற்றி ஆராய்ச்சிப் பேப்பர்கூட படிக்கலாம்.
Short Term Memory Loss என்பது ஒருவகை.
Senile Dementia என்பதிலும் மறதி ஏற்படும்.
Brain Fog என்பதும்கூட ஒருவகை மறதிதான். இது ஒரு மாதிரியான 
குழப்பநிலை. 
"கதவைப் பூட்டினோமா இல்லையா?", என்று கோலாலும்ப்பூரிலிருந்து புறப்பட்டு, திருச்சியை நெருங்கும்போது திகில் வருவது; குற்றாலம் 
நீர்வீழ்ச்சியைப் பார்க்கும்போது, "குழாயை அடைத்தோமா இல்லையா?" என்ற சந்தேகம் வருவது..... இதுமட்டுமல்ல.
டிரவுசர் போட்டு ஸிப்பை இழுத்துவிடாமல் ஸெமினாரில் பேப்பர் வாசிப்பது போன்றவையெல்லாம் ப்ரேய்ன் ·பாக்தான். 
உண்மைக்கும் கனவுக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு வினோத நிலை இருக்கிறது. அதுவுமே அப்படித்தான்.
அன்றாடம் புழங்கும் சாதாரண பொருள்களின் பெயர்கூட நினைவுக்கு 
வராதது.... அடுத்த வீட்டுக்காரியின் பெயர் சட்டென்று வராமல், "அடி இவளே....." என்று அழைப்பது, இடத்தை நெருங்கும்போது வீட்டு அட்ரெஸ் மறப்பது, 
பார்த்த முகம்போல தோன்றி...."அவனா இவென்....?" என்று மனதுக்குள் 
கேட்டுக்கொள்வது.... நிலைமை மீறியபின்னரே "வந்துட்டாண்டா வந்துட்டான்", 
என்பது எல்லாம் Brain Fog தான்.

அன்புடன்

ஜெயபாரதி

1 comment: