Wednesday, September 19, 2012

THE REALITY-#2



யதார்த்தம் -#2


"மலேசியத் தமிழர்களிடையே புத்தகம் படிக்கும் வழக்கம் மிக மிக அருகிவிட்டது", என்று மலேசிய ஆய்வாளர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் என்னிடம் கூறினார். 
வைக்க இடமில்லாமல் வீடு நிறைய - மாடிப்படிகளில்கூட - புத்தகங்களை நான் வைத்திருப்பதைப் பார்த்து அவர் வியந்ததை ஒட்டி, அவர் சொன்ன உண்மை இது.
தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். 
நான்கு நாட்களுக்கு முன்னர் கூலிம் நந்தா சொன்னதும் ஓர் உண்மை 
நிலையைப் பிரதிபலிப்பதுதான்.

அவர் சொன்னது:
>>>>>>>>>>>>>>>>>>>>..
"நீங்க ரொம்ப ஸிம்ப்லாத்தான் எழுதுறீங்க. நடு நடுவுல உள்ள வர்ட்ஸ் புரியலெ. இங்க ரொம்பப் பேரு மலாய் ஸ்க்கூல்ள படிச்சவங்க. தமிழ் 
ஸ்க்கூல்ளெனாக்கக்கூட ரொம்ப வர்ட்ஸ் புரியாது. அதும் லிட்டிரீச்சர் பத்தி எழுதினாக்க ரொம்பவும் கஸ்டப்படுது......."
"சரி. இதுக்கு என்ன செய்யலாம்ங்கிறீங்க?" என்றேன். 
"முக்கியமானதுஹளயெல்லாம் நீங்க இங்க்லீஷ்லயோ, மலேய்லயோ எழுதலாம். ஏற்கனவே எழுதுனத இங்க்லீஷ், மலேய்ல திருப்பி எழுதலாம். ஆனா அதுனால உங்களுக்கும் பேர்புகழாகும்; இன்னோண்ணு ரொம்பப் பேருக்குப் பயனாவும் இருக்கும். ஒங்களுக்குத் தெரியாததில்லெ. எனக்கு மனசுல பட்டதச் சொல்றென்."
பேசாமல் இருந்தேன்.
அவர் தொடர்ந்தார்..... "இப்பப் பாருங்க டாக்டர். ஒங்க தமிழ் ·பேஸ்புக்ல எத்துன பேரு இருக்காங்க? அவங்களும் கமெண்ட்ஸ்கூட எழுதுறது கெடையாது. ஆனா ஒங்க இங்க்லீஷ் ·பேஸ்புக்ல ரெண்டாயிரத்து ஐந்நூறு பேரு இருக்காங்க. நெறய கமெண்ட்ஸ், லைக்கு எல்லாம்".
அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
"இப்ப ரொம்பப் பேரு டெஸ்க் டாப், லேப்டாப்னு வச்சுக்குறது இல்ல. 
எல்லாம் ரொம்ப அட்வான்ஸாகீருச்சு. அதுங்கள்ல தமிழ் எழுதவும் முடியாது. படிக்கவும் முடியாது. We have to move with times, Doctor!", என்றார். 
"இங்க்லீஷ், மலேய்னாக்க நீங்க எழுதுனது எல்லாத்தையும் அப்புடியே காம்ப்பைல் பண்ணி புக்கா போட்டுரலாம். நல்ல மார்க்கெட்டும் இருக்கும். தமிழ்ல போட்டுட்டு வெளியீட்டு வெழா, அது இதுன்னுட்டு ஆளுங்கள தொங்கிக்கிட்டு கெஞ்சிக்கிட்டு இருக்க வேணாம்", என்றார்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இது ஒரு யதார்த்த நிலை. 
ஆனால் மலாயா பல்கலை க்கழக இந்தியத்துறையோ, தமிழ் மீடியாவோ சில சங்கங்களோ வேறு வகையாகச் சொல்லக்கூடும்.
நான் அறிந்தவரையில் மலேசியத் தமிழ் இளைஞர்களிடையே இங்கிலீஷ¤ம் சரி, தமிழும் சரி - தரம் குறைந்தே காணப்படுகிறது. 
ஒரு காலத்தில் Indian English என்று மலேசியர்கள் இந்தியத் தமிழர்கள் பேசுவதைக் கேலி செய்தது உண்டு. 
ஆனால் இப்போதோ நிலைமையே 'தெர்பாலிக்' - தலைகீழாக மாறி
விட்டிருக்கிறது.
எஸ்ஸெம்மெஸ் பாஷையும் நிலைமையைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறது.
இன்னொரு மடற்குழுவில் இணையத்தில் பதினோரு ஆண்டுகளாகப் புழங்கிக் கொண்டிருக்கும் வெட்டரன் ஒருவர், தாம் அச்சில் படிப்பது காலை செய்திப் பத்திரிக்கையை மட்டும்தான் என்கிறார். மற்றவற்றை இணையத்தில்தான் படிக்கிறார். இணையத்தைத் திறந்து வைத்துக் கொண்டு, பக்கம் பக்கமாக யாரும் ஈ-புக் புத்தகத்தைப் படிப்பதில்லை. அப்படிப் படிப்பவர்கள் மிக மிகக் குறைவு.
"ஈ-புக் மட்டுமே நூத்தி இருவது புக்க நான் என் காம்ப்பியூட்டருல 
டவுன்லோட் பண்ணி வெச்சிருக்கேன்பா. நெனச்சாப்புல தொறந்து படிச்சுக்கலாம் பாரு? அத அப்புடியே தம்ப் டிரவுல எறக்கி வேற வெச்சிருக்கேன்". 
இதுதான் நிலைமை.
இன்னும் எழுதவேண்டியிருக்கிறது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


No comments:

Post a Comment