அகிலாண்டேஸ்வரியின் தாடங்கம்
அவற்றின்பேரில் பல கேள்விகள். விளக்கங்களும் கொடுத்துள்ளேன்.
மேல்விபரமும் தேவைப்பட்டது.
ஆகவே ஏழாண்டுகளுக்கு முன்னர் அகிலாண்டேஸ்வரி சம்பந்தமாக அகத்தியரில் நான் எழுதிய மடல் ஒன்றை முன்னிலைப் படுத்தவேண்டியுள்ளது.
இதில் சில மாற்றங்க¨ளைச் செய்துள்ளேன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Date: Mon, 21 Mar 2005 19:26:00 +0800
From: JayBee <jaybee@tm.net.my>
பரமாச்சாரியார்-#5
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரிக்கு ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர
தாடங்கங்களை அணிவித்திருந்தார். நாளடைவில் அவை தேய்ந்துவிட்டதால் புதிதாகச் செய்து அவர் கையாலேயே அணிவித்தார், காஞ்சி பரமாச்சார்யார்.
ஆதிசங்கரர் காலத்துக்கு முன்னர், இன்று பிரபலமாக விளங்கும் பல கோயில்களில் இப்போதுள்ள வழிபாடுகளோ நடைமுறைகளோ இல்லை.
அங்கிருக்கும் தெய்வங்களுக்கும் இன்றுள்ள பெயர்கள் இல்லை.
அப்போது புழக்கத்தில் இருந்த அவற்றிற்குரிய பூஜாவிதானங்கள், ஆகமங்கள், தந்திரங்கள், யாமளங்கள் முதலியவை இப்போது கிடையாது.
இன்று சௌம்யமாக விளங்கும் பல தெய்வங்கள் ஒரு காலகட்டத்தில்
உக்கிர கலையைக்கொண்டிருந்தன.
திருவானைக்காவின் அகிலாண்டேஸ்வரியை 'தண்டநாதா' என்றும்
'மஹாவாராஹி' என்றும் சொல்வார்கள். ராஜராஜேஸ்வரியாகிய ஸ்ரீலலிதாவின் சேனாதிபதி சக்தி அவள்.
ஒரு காலத்தில் அவளுக்குரிய வழிபாட்டு முறைகளின் காரணமாக அவள் உக்கிரகலையைக் கொண்டிருந்தாள். அதனால் சில விபரீதங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.
ஆதி சங்கரர் அங்கு சென்றிருந்தபோது, அவளுடைய உக்கிர கலையை
தாடங்கங்களில் அடக்கி அவற்றை அவளுக்கே அணிவித்தார்.
அந்தத் தாடங்கங்களில் ஸ்ரீசக்ரம் வரையப்பட்டிருந்தது. அவற்றில்தான்
அந்த சக்தி உள்ளடக்கப்பட்டது.
அம்பிகையின் தாடங்கங்கள் தோடுபோல் இருக்கும். ஆனால் அளவில்
பெரிதானவை.
அம்பிகையின் தாடங்கங்களின் மகிமையாலேயே சிவன் ஆலஹால விஷத்தை குடித்தும் அபாயமேற்படாமல் அப்படியே இருக்கிறார் என்று ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்ய லஹரியில் கூறியிருக்கிறார்.
'தாடங்க யுகளீபூத தபநோடுப மண்டலா' என்பது ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம். 'சூரியனும் சந்திரனும் தாடங்கங்களாக அமைந்திருக்கின்றன' என்று கூறுகிறது.
தாடங்கங்களில் உக்கிரகலையை அடக்கியதோடல்லாமல் சக்தி
வெளியீட்டை வாங்கிக்கொள்வதற்காக அகிலாண்டேஸ்வரியின் பார்வை படும் இடத்தில் அவளுக்கு நேர்முன்பாக ஒரு விநாயகரை அமரச்செய்துவிட்டார்.
அத்துடன் அகிலாண்டேஸ்வரியின் பின்புறமாக முருகனுடைய சிலையை ஸ்தாபனம் செய்துவைத்தார்.
ஆதிசங்கரர் செய்துவைத்த தாடங்கம் பழையதாகிவிட்டதால் அதனைப்
புதிதாகச் செய்து பெரியவர்கள் அணிவித்தார்.
அவர் செய்த முக்கியமான பல காரியங்களில் முதலாவதாகச் செய்தது இந்தத் திருப்பணி.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<,,
No comments:
Post a Comment