யதார்த்தம் -#1
சில முக்கியமான யோசனைகளை அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவற்றில் ஒன்று.....
நான் எழுதிய முக்கியமான கட்டுரைகள் தமிழில் இருப்பதாகச் சொன்னார்.
சில காரணங்களால் அவற்றைப் படிக்கமுடியவில்லை என்றார்.
"நான் எழுதும் நடையோ மொழியோ கஷ்டமாக இருக்கிறதா?" என்று கேட்டேன்.
"நீங்க ரொம்ப ஸிம்ப்லாத்தான் எழுதுறீங்க. நடு நடுவுல உள்ள வர்ட்ஸ் புரியலெ. இங்க ரொம்பப் பேரு மலாய் ஸ்க்கூல்ள படிச்சவங்க. தமிழ் ஸ்க்கூல்ளெனாக்கக்கூட ரொம்ப வர்ட்ஸ் புரியாது. அதும் லிட்டிரீச்சர் பத்தி எழுதினாக்க ரொம்பவும் கஸ்டப்படுது......."
"சரி. இதுக்கு என்ன செய்யலாம்ங்கிறீங்க?" என்றேன்.
"முக்கியமானதுஹளயெல்லாம் நீங்க இங்க்லீஷ்லயோ, மலேய்லயோ எழுதலாம். ஏற்கனவே எழுதுனத இங்க்லீஷ், மலேய்ல திருப்பி எழுதலாம்.
ஆனா அதுனால உங்களுக்கும் பேர்புகழாகும்; இன்னோண்ணு ரொம்பப் பேருக்குப் பயனாவும் இருக்கும். ஒங்களுக்குத் தெரியாததில்லெ. எனக்கு மனசுல பட்டதச் சொல்றென்."
பேசாமல் இருந்தேன்.
அவர் தொடர்ந்தார்..... "இப்பப் பாருங்க டாக்டர். ஒங்க தமிழ்
·பேஸ்புக்ல எத்துன பேரு இருக்காங்க? அவங்களும் கமெண்ட்ஸ்கூட
எழுதுறது கெடையாது. ஆனா ஒங்க இங்க்லீஷ் ·பேஸ்புக்ல ரெண்டாயிரத்து ஐந்நூறு பேரு இருக்காங்க. நெறய கமெண்ட்ஸ், லைக்கு எல்லாம்".
அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
"இப்ப ரொம்பப் பேரு டெஸ்க் டாப், லேப்டாப்னு வச்சுக்குறது இல்ல.
எல்லாம் ரொம்ப அட்வான்ஸாகீருச்சு. அதுங்கள்ல தமிழ் எழுதவும் முடியாது. படிக்கவும் முடியாது. We have to move with times, Doctor!", என்றார்.
"இங்க்லீஷ், மலேய்னாக்க நீங்க எழுதுனது எல்லாத்தையும் அப்புடியே
காம்ப்பைல் பண்ணி புக்கா போட்டுரலாம். நல்ல மார்க்கெட்டும் இருக்கும். தமிழ்ல போட்டுட்டு வெளியீட்டு வெழா, அது இதுன்னுட்டு ஆளுங்கள தொங்கிக்கிட்டு கெஞ்சிக்கிட்டு இருக்கவேணாம்", என்றார்.
அப்படியே கொஞ்ச நேரம் முழித்துப் பார்த்தார்.
அதுதான் அவருடைய டிரேட் மார்க்.
அவரைச் சொல்லிக் குற்றமில்லை.
ரொம்பவும் யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதுதான் உண்மை.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment