Sunday, September 30, 2012

FIRST LINE IN KAMASUTRA




காமஸூத்ராவிலே 
அவள் முதல் வரி

'கந்தசாமி' என்றொரு படம்.
விக்ரமும் ஸ்ரேயாவும் நடித்தது. அதில் ஒரு வில்லர் வருகிறார். அவர் 
இந்தியாவில் இருக்கும் எல்லா குற்றச்செயல்களையும் செய்பவர். கள்ள 
டாக்குமெண்ட் பத்திரங்கள், கள்ள பாஸ்ப்போர்ட், கள்ள நோட்டு என்று 
சகலவித கள்ள சமாச்சாரங்களையும் தம்முடைய உல்லாச பஸ்ஸின் சேஸிலில் 
ஒளித்து வைத்திருப்பவர். அதனாலேயே அவருடைய வீடு, தோப்பு, துரவு என்று எங்கு ரேய்ட் செய்தாலும் எதையும் கைப்பற்ற முடிந்ததில்லை. 
அந்த பஸ்ஸிலேயே படுக்கை, குளியல் முதல் அனைத்து அயன சயன 
போக ஆலிங்கன சும்பித தாடன சம்போக சௌபாக்கியங்களுக்கும் 
வசதிகள் இருந்தன.
ஒரு பப் டான்ஸரை டீவீயில் பார்த்து விட்டு அவளுக்கு எவ்வளவு என்று 
கேட்டு அவளைக் கூட்டி வரச்செய்தார். முப்பது லட்சம். 
அப்படி வந்தவள்தான் கன்யாகுமாரியைச் சேர்ந்த மீனாகுமாரி.
அவள் பாட ஆட ஆரம்பித்தாள் 
அவள் பாடிய பாட்டில் ஓரிடத்தில் இவ்வாறு வருகிறது.......

"காம ஸ¥த்ராவிலே நான் முதல் வரி" 

கொஞ்ச நாட்களாக ஒரு சந்தேகம்.
அது என்ன முதல் வரி?
என்னிடம்தான் காம ஸ¥த்ரா புத்தகமே இருக்கிறதே. 
எடுத்துப் பார்த்தேன்.
அது இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு.

முதல் வரி இப்படி இருந்தது.....

"Salutation to Dharma, Artha, and Kama. 

In the beginning, the Lord of Beings created men and women, 
and in the form of commandments in one hundred thousand 
chapters laid down rules for regulating their existence with 
regard to Dharma, Artha, and Kama".

இதுதான் காம ஸ¥த்ராலே முதல் வரி
ஒருவழியாக ரொம்பநாள் தினவு அடங்கியது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tuesday, September 25, 2012

A NEW COMPULSION



A NEW COMPULSION

During a period of 45 years, I have been buying accumulating a collection of about 5000 books.
Their total value might be around 250,000 Ringgit now.
I have been forced into a situation of doing a new thinking about these books.
There are many books which are not in print. There many rare books of antique value. And there are also books belonging to selective categories.
Some years ago, I tried to compile them and prepare an index. But could not because the people who promised to do the job, did not turn up.
There are some reasons why I collected these books.
But my aims and dreams have been shattered by some local and foreign scoundrels.
Age and health are there.
These books occupy a lot of space in my house. The walls are full of shelves. And still, I cannot find enough space to keep them. I have to place
them on the stairway and corridors.
A lot of the books are being damaged. Some books have been damaged
by rats. Monsoon rain with a lot of humidity also cause damage.
I have already spent 3000 Ringgit for Anti-termite treatment. And lately
700 Ringgit for destroying the rats.
So I have to sell the books.
Those who take over the house after us cannot have the house with so much clutter of books.
It is also not fair to load people with such a voluminous collection.
Hence I have to SELL the books.
FOR SALE ONLY!
Dont give me any other ideas.

Regards

JayBee

Thursday, September 20, 2012

AKHILANDESWARI'S THATANGGAM


அகிலாண்டேஸ்வரியின் தாடங்கம்


என்னுடைய ·பேஸ்புக் ஒன்றில் காஞ்சி காமாக்ஷ¢, மதுரை மீனாக்ஷ¢, திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தேன். 
அவற்றின்பேரில் பல கேள்விகள். விளக்கங்களும் கொடுத்துள்ளேன். 
மேல்விபரமும் தேவைப்பட்டது. 
ஆகவே ஏழாண்டுகளுக்கு முன்னர் அகிலாண்டேஸ்வரி சம்பந்தமாக அகத்தியரில் நான் எழுதிய மடல் ஒன்றை முன்னிலைப் படுத்தவேண்டியுள்ளது. 
இதில் சில மாற்றங்க¨ளைச் செய்துள்ளேன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Date: Mon, 21 Mar 2005 19:26:00 +0800
From: JayBee <jaybee@tm.net.my>
பரமாச்சாரியார்-#5

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரிக்கு ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர 
தாடங்கங்களை அணிவித்திருந்தார். நாளடைவில் அவை தேய்ந்துவிட்டதால் புதிதாகச் செய்து அவர் கையாலேயே அணிவித்தார், காஞ்சி பரமாச்சார்யார். 

ஆதிசங்கரர் காலத்துக்கு முன்னர், இன்று பிரபலமாக விளங்கும் பல கோயில்களில் இப்போதுள்ள வழிபாடுகளோ நடைமுறைகளோ இல்லை. 
அங்கிருக்கும் தெய்வங்களுக்கும் இன்றுள்ள பெயர்கள் இல்லை.
அப்போது புழக்கத்தில் இருந்த அவற்றிற்குரிய பூஜாவிதானங்கள், ஆகமங்கள், தந்திரங்கள், யாமளங்கள் முதலியவை இப்போது கிடையாது.
இன்று சௌம்யமாக விளங்கும் பல தெய்வங்கள் ஒரு காலகட்டத்தில்
உக்கிர கலையைக்கொண்டிருந்தன.

திருவானைக்காவின் அகிலாண்டேஸ்வரியை 'தண்டநாதா' என்றும் 
'மஹாவாராஹி' என்றும் சொல்வார்கள். ராஜராஜேஸ்வரியாகிய ஸ்ரீலலிதாவின் சேனாதிபதி சக்தி அவள்.
ஒரு காலத்தில் அவளுக்குரிய வழிபாட்டு முறைகளின் காரணமாக அவள் உக்கிரகலையைக் கொண்டிருந்தாள். அதனால் சில விபரீதங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.
ஆதி சங்கரர் அங்கு சென்றிருந்தபோது, அவளுடைய உக்கிர கலையை 
தாடங்கங்களில் அடக்கி அவற்றை அவளுக்கே அணிவித்தார்.
அந்தத் தாடங்கங்களில் ஸ்ரீசக்ரம் வரையப்பட்டிருந்தது. அவற்றில்தான்
அந்த சக்தி உள்ளடக்கப்பட்டது.
அம்பிகையின் தாடங்கங்கள் தோடுபோல் இருக்கும். ஆனால் அளவில் 
பெரிதானவை.
அம்பிகையின் தாடங்கங்களின் மகிமையாலேயே சிவன் ஆலஹால விஷத்தை குடித்தும் அபாயமேற்படாமல் அப்படியே இருக்கிறார் என்று ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்ய லஹரியில் கூறியிருக்கிறார்.
'தாடங்க யுகளீபூத தபநோடுப மண்டலா' என்பது ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம். 'சூரியனும் சந்திரனும் தாடங்கங்களாக அமைந்திருக்கின்றன' என்று கூறுகிறது.
தாடங்கங்களில் உக்கிரகலையை அடக்கியதோடல்லாமல் சக்தி 
வெளியீட்டை வாங்கிக்கொள்வதற்காக அகிலாண்டேஸ்வரியின் பார்வை படும் இடத்தில் அவளுக்கு நேர்முன்பாக ஒரு விநாயகரை அமரச்செய்துவிட்டார்.
அத்துடன் அகிலாண்டேஸ்வரியின் பின்புறமாக முருகனுடைய சிலையை ஸ்தாபனம் செய்துவைத்தார்.
ஆதிசங்கரர் செய்துவைத்த தாடங்கம் பழையதாகிவிட்டதால் அதனைப் 
புதிதாகச் செய்து பெரியவர்கள் அணிவித்தார்.
அவர் செய்த முக்கியமான பல காரியங்களில் முதலாவதாகச் செய்தது இந்தத் திருப்பணி.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<,,

Wednesday, September 19, 2012

THE REALITY-#2



யதார்த்தம் -#2


"மலேசியத் தமிழர்களிடையே புத்தகம் படிக்கும் வழக்கம் மிக மிக அருகிவிட்டது", என்று மலேசிய ஆய்வாளர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் என்னிடம் கூறினார். 
வைக்க இடமில்லாமல் வீடு நிறைய - மாடிப்படிகளில்கூட - புத்தகங்களை நான் வைத்திருப்பதைப் பார்த்து அவர் வியந்ததை ஒட்டி, அவர் சொன்ன உண்மை இது.
தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். 
நான்கு நாட்களுக்கு முன்னர் கூலிம் நந்தா சொன்னதும் ஓர் உண்மை 
நிலையைப் பிரதிபலிப்பதுதான்.

அவர் சொன்னது:
>>>>>>>>>>>>>>>>>>>>..
"நீங்க ரொம்ப ஸிம்ப்லாத்தான் எழுதுறீங்க. நடு நடுவுல உள்ள வர்ட்ஸ் புரியலெ. இங்க ரொம்பப் பேரு மலாய் ஸ்க்கூல்ள படிச்சவங்க. தமிழ் 
ஸ்க்கூல்ளெனாக்கக்கூட ரொம்ப வர்ட்ஸ் புரியாது. அதும் லிட்டிரீச்சர் பத்தி எழுதினாக்க ரொம்பவும் கஸ்டப்படுது......."
"சரி. இதுக்கு என்ன செய்யலாம்ங்கிறீங்க?" என்றேன். 
"முக்கியமானதுஹளயெல்லாம் நீங்க இங்க்லீஷ்லயோ, மலேய்லயோ எழுதலாம். ஏற்கனவே எழுதுனத இங்க்லீஷ், மலேய்ல திருப்பி எழுதலாம். ஆனா அதுனால உங்களுக்கும் பேர்புகழாகும்; இன்னோண்ணு ரொம்பப் பேருக்குப் பயனாவும் இருக்கும். ஒங்களுக்குத் தெரியாததில்லெ. எனக்கு மனசுல பட்டதச் சொல்றென்."
பேசாமல் இருந்தேன்.
அவர் தொடர்ந்தார்..... "இப்பப் பாருங்க டாக்டர். ஒங்க தமிழ் ·பேஸ்புக்ல எத்துன பேரு இருக்காங்க? அவங்களும் கமெண்ட்ஸ்கூட எழுதுறது கெடையாது. ஆனா ஒங்க இங்க்லீஷ் ·பேஸ்புக்ல ரெண்டாயிரத்து ஐந்நூறு பேரு இருக்காங்க. நெறய கமெண்ட்ஸ், லைக்கு எல்லாம்".
அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
"இப்ப ரொம்பப் பேரு டெஸ்க் டாப், லேப்டாப்னு வச்சுக்குறது இல்ல. 
எல்லாம் ரொம்ப அட்வான்ஸாகீருச்சு. அதுங்கள்ல தமிழ் எழுதவும் முடியாது. படிக்கவும் முடியாது. We have to move with times, Doctor!", என்றார். 
"இங்க்லீஷ், மலேய்னாக்க நீங்க எழுதுனது எல்லாத்தையும் அப்புடியே காம்ப்பைல் பண்ணி புக்கா போட்டுரலாம். நல்ல மார்க்கெட்டும் இருக்கும். தமிழ்ல போட்டுட்டு வெளியீட்டு வெழா, அது இதுன்னுட்டு ஆளுங்கள தொங்கிக்கிட்டு கெஞ்சிக்கிட்டு இருக்க வேணாம்", என்றார்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இது ஒரு யதார்த்த நிலை. 
ஆனால் மலாயா பல்கலை க்கழக இந்தியத்துறையோ, தமிழ் மீடியாவோ சில சங்கங்களோ வேறு வகையாகச் சொல்லக்கூடும்.
நான் அறிந்தவரையில் மலேசியத் தமிழ் இளைஞர்களிடையே இங்கிலீஷ¤ம் சரி, தமிழும் சரி - தரம் குறைந்தே காணப்படுகிறது. 
ஒரு காலத்தில் Indian English என்று மலேசியர்கள் இந்தியத் தமிழர்கள் பேசுவதைக் கேலி செய்தது உண்டு. 
ஆனால் இப்போதோ நிலைமையே 'தெர்பாலிக்' - தலைகீழாக மாறி
விட்டிருக்கிறது.
எஸ்ஸெம்மெஸ் பாஷையும் நிலைமையைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறது.
இன்னொரு மடற்குழுவில் இணையத்தில் பதினோரு ஆண்டுகளாகப் புழங்கிக் கொண்டிருக்கும் வெட்டரன் ஒருவர், தாம் அச்சில் படிப்பது காலை செய்திப் பத்திரிக்கையை மட்டும்தான் என்கிறார். மற்றவற்றை இணையத்தில்தான் படிக்கிறார். இணையத்தைத் திறந்து வைத்துக் கொண்டு, பக்கம் பக்கமாக யாரும் ஈ-புக் புத்தகத்தைப் படிப்பதில்லை. அப்படிப் படிப்பவர்கள் மிக மிகக் குறைவு.
"ஈ-புக் மட்டுமே நூத்தி இருவது புக்க நான் என் காம்ப்பியூட்டருல 
டவுன்லோட் பண்ணி வெச்சிருக்கேன்பா. நெனச்சாப்புல தொறந்து படிச்சுக்கலாம் பாரு? அத அப்புடியே தம்ப் டிரவுல எறக்கி வேற வெச்சிருக்கேன்". 
இதுதான் நிலைமை.
இன்னும் எழுதவேண்டியிருக்கிறது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


THE REALITY-#1


யதார்த்தம் -#1

சிலநாட்களுக்கு முன்பு ஓர் அன்பர் அருகிலுள்ள ஊரான கூலிமிலிருந்து வந்திருந்தார். 
சில முக்கியமான யோசனைகளை அவர் சொல்லிக் கொண்டிருந்தார். 
அவற்றில் ஒன்று.....
நான் எழுதிய முக்கியமான கட்டுரைகள் தமிழில் இருப்பதாகச் சொன்னார். 
சில காரணங்களால் அவற்றைப் படிக்கமுடியவில்லை என்றார். 
"நான் எழுதும் நடையோ மொழியோ கஷ்டமாக இருக்கிறதா?" என்று கேட்டேன். 
"நீங்க ரொம்ப ஸிம்ப்லாத்தான் எழுதுறீங்க. நடு நடுவுல உள்ள வர்ட்ஸ் புரியலெ. இங்க ரொம்பப் பேரு மலாய் ஸ்க்கூல்ள படிச்சவங்க. தமிழ் ஸ்க்கூல்ளெனாக்கக்கூட ரொம்ப வர்ட்ஸ் புரியாது. அதும் லிட்டிரீச்சர் பத்தி எழுதினாக்க ரொம்பவும் கஸ்டப்படுது......."
"சரி. இதுக்கு என்ன செய்யலாம்ங்கிறீங்க?" என்றேன். 
"முக்கியமானதுஹளயெல்லாம் நீங்க இங்க்லீஷ்லயோ, மலேய்லயோ எழுதலாம். ஏற்கனவே எழுதுனத இங்க்லீஷ், மலேய்ல திருப்பி எழுதலாம். 
ஆனா அதுனால உங்களுக்கும் பேர்புகழாகும்; இன்னோண்ணு ரொம்பப் பேருக்குப் பயனாவும் இருக்கும். ஒங்களுக்குத் தெரியாததில்லெ. எனக்கு மனசுல பட்டதச் சொல்றென்."
பேசாமல் இருந்தேன்.
அவர் தொடர்ந்தார்..... "இப்பப் பாருங்க டாக்டர். ஒங்க தமிழ் 
·பேஸ்புக்ல எத்துன பேரு இருக்காங்க? அவங்களும் கமெண்ட்ஸ்கூட 
எழுதுறது கெடையாது. ஆனா ஒங்க இங்க்லீஷ் ·பேஸ்புக்ல ரெண்டாயிரத்து ஐந்நூறு பேரு இருக்காங்க. நெறய கமெண்ட்ஸ், லைக்கு எல்லாம்".
அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
"இப்ப ரொம்பப் பேரு டெஸ்க் டாப், லேப்டாப்னு வச்சுக்குறது இல்ல. 
எல்லாம் ரொம்ப அட்வான்ஸாகீருச்சு. அதுங்கள்ல தமிழ் எழுதவும் முடியாது. படிக்கவும் முடியாது. We have to move with times, Doctor!", என்றார். 
"இங்க்லீஷ், மலேய்னாக்க நீங்க எழுதுனது எல்லாத்தையும் அப்புடியே 
காம்ப்பைல் பண்ணி புக்கா போட்டுரலாம். நல்ல மார்க்கெட்டும் இருக்கும். தமிழ்ல போட்டுட்டு வெளியீட்டு வெழா, அது இதுன்னுட்டு ஆளுங்கள தொங்கிக்கிட்டு கெஞ்சிக்கிட்டு இருக்கவேணாம்", என்றார்.
அப்படியே கொஞ்ச நேரம் முழித்துப் பார்த்தார்.
அதுதான் அவருடைய டிரேட் மார்க்.
அவரைச் சொல்லிக் குற்றமில்லை.
ரொம்பவும் யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதுதான் உண்மை.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday, September 5, 2012

TO WALLOP YON TIGER....!



சீறி வந்த புலியதனை........

சிலநாட்களுக்கு முன்னர் பயம் என்னும் தலைப்பில் எழுதிக்கொண்டிருந்தேன். 
அப்போது புலியைப் பார்த்த மாத்திரத்தில் ஏற்படும் கிலியைப் பற்றியும் Panic Seizure, Panic Paralysis என்பனவற்றைப் பற்றியும் எழுதியிருந்தேன். 'புலி அடித்ததோ, கிலி அடித்ததோ' என்னும் முதுமொழியைப் பற்றியும் சொல்லியிருந்தேன். 
சில சமயங்களில் அந்த பயத்தையும் ஒழித்துவிட்டு தைரியத்துடன் செயல் பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். 
ரொம்ப நாட்களுக்கு முன்னர் 'சொர்க்கவாசல்' என்னும் படம் வந்தது. அந்தப் படத்தின் கதை அசனம் பேரறிஞர் அண்ணா. அதன் ஹீரோவாக நடித்திருந்தவர் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி. நன்றாகப் பாடுவார். பல எழுச்சி மிக்க, தமிழ் உணர்வையும் பற்றையும் தூண்டக்கூடிய பாடல்களைப் பாடியிருக்கிரார். 
அந்தப் படத்தில் ஒரு மெல்லிசைப் பாடல் வரும்.
'கன்னித் தமிழ்ச்சாலையோரம் போகையிலே
கவிதைக் கனிகளுண்டு......(ஏதோ வரும். ஞாபகம் இல்லை)

அந்தப் பாட்டிலே ஓரிடத்தில்.....

சீறி வந்த புலியதனை முறத்தினாலே - அடித்து 
சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாளே!

என்ற அடிகள் வரும். 
சில பெண்கள் ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பெண், முறத்தை வைத்துக்கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்தாள்.
அப்போது ஒரு புலி அவர்களைப் பிடிப்பதற்காக சீறிக்கொண்டு பாய்ந்து வந்தது. மற்றவர்கள் பயந்திருப்பார்கள். அவர்களில் அந்த முறத்துக்காரப் பெண் மட்டும் சற்றும் பயமே இல்லாமல் கையில் இருந்த முறத்தைக் கொண்டு அந்தப் புலியைத் தாக்கினாள்.
சங்க காலத்துத் தமிழச்சிகளில் இப்படிப்பட்ட தைரியசாலிகள் இருந்தனர் என்று முன்பெல்லாம் மேடைப்பேச்சாளர்கள் கூறுவது உண்டு. 

இப்போதும் இருக்கின்றனர்.
எப்போதும் இருந்தனர்.
வங்காளதேசத்தில் ஓரிடத்தில் வேங்கைப் புலிகள் அதிகம். 
அங்கு நஸ்மா அக்டெர் என்னும் பெண்ணும் அவளுடைய கணவனும் ஒரு கால்வாயில் இரால் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். 
அப்போது ஒரு வேங்கைப் புலி, கணவனின்மீது பாய்ந்து முழங்காலைக் கௌவி, அவனை இழுத்துச்சென்றது. 
இதைக் கண்ட அக்டெர், அருகில் உள்ள படகில் கிடந்த துடுப்பை எடுத்து அந்த வேங்கையை அடித்தாள். தொடர்ச்சியாக அடித்துக் கொண்டேயிருந்தாள். இவ்வாறு பத்து நிமிடங்கள் அடி கொடுத்து, அந்தப் புலியைத் தடுத்து நிறுத்திவிட்டாள். வேங்கை அதன் பிடியை விட்டு விட்டது. 
கடுமையாக அடி வாங்கிய வேங்கைப் புலி தப்பித்து, காட்டுக்குள் ஓடிவிட்டது.
கணவனுக்குச் சிறிய காயங்களே ஏற்பட்டன.
அக்டெருக்கு வயது பதினெட்டேதான். 
வங்கத்தில் ஒரு கேஅர் ஆர் இருந்திருந்தால் பாடியிருப்பார்...

"சீறிவந்த புலியதனைத் துடுப்பினாலே அடித்து 
சிங்கார வங்க வனிதைத் துரத்தினாளே....."

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday, September 2, 2012



Dear Agathiyarians,

This is a question asked last night in the FaceBook Inbox.
>>>>>>>>>>>>>>>>
" Ayya.... I want to ask you something, many of relatives believe that an ailment or a misfortune can be rectified by seeing a samiyar who sprinkles some sort of holy water.
<<<<<<<<<<<<<<<<<<<<

I would not say that this is plain superstition or muuda nambikkai.
This is an age-old practice. May be started when Mankind was still in Stone Age. It could have been practiced by Shamans just as it is still being practiced to this day.
If you happen to see old Tamil movies - may be taken before 1950, you will find that quite a number of them were themes from Puranas or Fantasies.
A Rishi is a superhuman person who by means of his austerities called Tapas, would have developed super human powers. A Rishi could curse, or bless a person. Or he can change a person into a lowly animal or stone or make the
person suffer in other ways.
When the Rishi is going to curse, he would pour some water from his pot called Kamandalam into his palm and utter the curse and sprinkle or throw the water at the victim.
A freedom from a curse was also effected in the same way.
Many holy places have ponds containing holy water. Water from certain rivers, well, ponds, lakes, sea are considered to be holy.
This water is used for sprinkling to cleanse a place, to sanctify a place or objects, or to drive away evil unwanted spirits.
There are many ways how water becomes holy.
Filling a pot with water and covering its mouth and chanting Manthras or doing certain pujais would make it holy.
A swamiji or prohithar usually does these rituals.
Some babies would be crying and the cause would be unknown. The mother would take the child to a Shaman- Saamaaiyaadi or any other person who knowns ManthraVaadham. The Shaman would brush the baby with Neem leaves after which he will slap a handful of water which has been chanted over with Manthras. The baby would stop crying.
In certain Dhoshams and Pariharams, a homam would be performed with a pot of water which is placed in front of the Homa Kundam. After the Homam, the subject person is made to sit down and the water is poured on the personage of the person. This is supposed to disple the negative aspects, dhoshams, fear, possessions, depression, bad dreams, etc. It is also done for purification.
Among the Malays there is a similar ritual which is known as Mandi Bunga.
Summing up.....
These things do work if done by an authentice person.
Faith plays a great part.
And there is also a certain percentage of placebo effect.

Regards

JayBee