சிதறிக்கிடந்த சீனாவை ஒன்றிணைத்து அதற்குத் தன் பெயரையே வைத்த முதல் சீனச் சக்கரவர்த்தி சின் ஷீ ஹுவாங் ட்டீ
அன்பர்களே,
தற்சமயம் சீனர்கள் தங்களுடைய வரலாற்றைப் பற்றி மிகவும் நுணுகி ஆராய்ந்துவருகிறார்கள். அவர்களுடைய அகழ்வாராய்ச்சிகள் பிரம்மாண்டமான அளவில் நடைபெறுகின்றன. பழஞ்சீன நூல்களும் பெரும் அளவில் ஆராயப்படுகின்றன,
அவற்றிலிருந்து இதுவரை பெறப்பட்ட விபரங்களின் அளவும் ஆழமும் தன்மையும் வியப்படையச் செய்கின்றன.
ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப் பட்ட பல கருவிகளை அவற்றின் எச்சங்களிளிருந்து புணரமைப்புசெய்து கண்டுபிடித்திருக்கிறார்கள். மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
அதனை பெரிய நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான தலைமுறைகளைச் சேர்ந்த கோடிக் கணக்கான படைவீரர்களில் 'வில்லிகள்' எனப்படும் வில் வீரர்கள் பயன்படுத்திய அத்தனை அம்புகளும் ஒரே நீளம் ஒரே மாதிரியான அமைப்பு, ஒரே மாதிரியான கனம் முதலியவற்றைக் கொண்டிருந்தன. Standardisation
என்பதன் உச்சகட்டத்தைப் பழங்காலச் சீனர்கள் எட்டி யிருந்தனர்.
தன் மீது எய்யப்பட்ட அம்பை எடுத்து தன்னுடைய வில்லிலேயே பூட்டி, நாணிழுத்து, தன் மீது எய்தவன்மேல் அவன் எய்த அம்பையே எய்யமுடியும். அந்த அளவுக்கு இருந்தது. ஒரே மாதிரியான விற்கள். ஒரே மாதிரியான அம்புகள்.
இது போலவே பலவற்றிற்கும் நிர்ணயிக்கப்பட்ட செய்முறைகள், விதிகள் இருந்தன.
இந்த மாதிரியான Standardisation நம்ம ஆட்களிடம் இருந்ததா?
முயற்சி செய்திருக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட காசில் எத்தனை பங்கு வெள்ளி, செம்பு ஆகியவை இருக்கவேண்டும், அதன் குறுக்களவு எவ்வளவு, அதன் கனமும் எடையும் எவ்வளவு என்பதற்கெல்லாம் விதிகளை ஏற்படுத்தியிருந்தார்கள்.
கௌட்டில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் விலாவாரியாகக் காணலாம்.
சுக்கிரநீதியிலும் காணலாம்.
அந்த விதிகளையெல்லாம் நம்ம ஆட்கள் கடைபிடித்தனரா?
இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
வேதங்களின் துணை நூல்களான உபவேதங்கள் நான்கு இருந்தன. ஆயுர்வேதம், காந்தர்வ வேதம், அர்த்த சாஸ்திரம், தனுர்வேதம்.
இவற்றில் ஆயுர்வேதம் என்பது வைத்திய சாஸ்திரம்.
காந்தர்வ வேதம் என்பது இசை நூல்.
அர்த்தசாஸ்திரம் என்பது பொருள் நூல்.
தனுர்வேதம் என்பது போரியல் நூல்.
தனுர்வேதத்திற்கு Derivative நூல்கள் ஏராளமாக இருந்திருக்க வேண்டும்.
திருக்குறளிலும் பொருள் அதிகாரத்தில் போரியல் விபரங்களைக் காணலாம்.
பொதுப்படையான போரியல் விதிகளைச் சொல்லி யிருக்கிறார். அந்த விதிகளில் பலவற்றைத் தற்காலப் போர்களுக்குள் இணைத்துப் பார்க்கமுடியும். பார்த்திருக்கிறேன். இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பானியத் தளபதியாகிய General Tomoyuki Yamashita நடத்திய Malaya Campaign and Fall Of Singapore என்னும் போரில் இணைத்துப் பார்த்திருக்கிறேன்.
பெரும்பாலும் நமக்குள் நடந்துகொண்டிருந்த போர்களில் இந்த போரியல் முறைகள் செல்லுபடியாகி இருந்தன.
ஆனால் அவை வெளிநாட்டுக்காரர்களிடம் பலிக்கவில்லை என்பதை நம் வரலாற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஹைடாஸ்ப்பெஸ், பானிப்பட் போன்ற போர்கள் சில உதாரணங்கள்.
அவர்களுடைய போர்முறைகளுக்கு மாற்றாக வேறு வேறு உத்திகள், வியூகங்கள், போர் முறைகள், ஆயுதங்கள் முதலியவற்றை நாமும் கண்டுபிடித்து கையாளும்போதும் நாம் பல சமயங்களில் வெற்றி பெற்றோம்.
வின்ஸ்ட்டன் சர்ச்சில் ஒருமுறை சொன்னார். அப்போது ஹிட்லரிடம் பல நாடுகள் தோற்றுப்போய் கைப்பற்றப் பட்டுவிட்டன. துணையின்றி ப்ரிட்டன் தனியாக நின்று போரிட்ட காலம்.
"We are prepared to lose many battles, as long as we win the last one".
"எத்தனை போர்களில் வேண்டுமானாலும் நாம் தோற்கத் தயார்தான். ஆனால் அந்த கடைசிப் போரில் மட்டும் நாம் ஜெயித்தால் போதும்."
ஆனால்......
எவ்வளவுதான் பலமும் திறமையும் இருந்தும்......
நாம் அந்தக் கடைசிப் போர்களில் தோற்றிருக்கிறோம்.
ஏன்?
அன்புடன்
ஜெயபாரதி

No comments:
Post a Comment