[agathiyar ] MAYAN ERA AND KALI YUGA(Tamil unicode)
Inbox
x
Inbox
9:24 AM (8 minutes ago)
| ||||
அன்பர்களே,
அடிக்கடி யாராவது 21-12-2012-இல் என்ன நடக்கும் என்று கேட்டுக்
கொண்டேயிருக்கிறார்கள்.
மாயான்களின் காலண்டர்படி அவர்களின் பஞ்சாங்கம் முடிகிறது.
'முடிந்த பிறகு என்ன?' என்பதை அவர்களின் பஞ்சாங்கம் ஒன்றும் சொல்லவில்லை.
இதோ பாருங்கள்......
3102 BC -யில் துவாபர யுகம் முடிந்தது. கலியுகம் ஆரம்பமாகியது. இது நம்ம பஞ்சாங்கம். வருசமாசந்தேதி நாழிகை முதற்கொண்டு நல்ல ஆட்களும் கணிக்கத்தான் செய்திருக்கிறார்கள்.
நம்ம யுகாப்த பஞ்சாங்கத்தின்படி கலியுகத்தில் இன்னும் நாலு லட்சத்துச் சொச்சம் வருஷம் பாக்கியிருக்கிறது.
துவாபர யுக முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்து கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் கலியுகம் தோன்றியது.
கலி தோன்றியதும் பாண்டவர்கள் ஜெயித்துவிட்டார்கள்.
இன்னும் Fine-Tuning செய்து பார்த்தால் துவாபர யுகம் முடிந்த
நேரத்தைக்கூட துல்லியமாகச் சொல்வார்கள்.
தர்மபுத்திரராகிய யுதிஷ்டிரர் - பாண்டவர்களில் மூத்தவர் - பொய்
சொன்ன நேரத்தில் துவாபரம் முடிந்து கலியுகம் பிறந்ததாகச் சொல்வார்கள்.
அதான்.... அந்த "அஸ்வத்தாம ஹத: <குஞ்சர:> episode.
அதுவரை தரையைத் தொடாமல் ஒரு ஜாண் உயரத்தில் ஓடிக்கொண்டிருந்த தர்மபுத்திரரின் தேர் உடனேயே தரை தட்டி, தரையின்மேல் ஓட ஆரம்பித்தது என்பார்கள்.
அதன்பின்னர் கலியுகத்தின் ஆரம்பத்துடன் பாண்டவர்கள் ஆட்சி
தொடங்கிவிட்டது.
பின்னர் துவாரகை அழிந்துபோய், கிருஷ்ணபரமாத்மாவின் அவதாரமும் முடிந்துவிட்டது.
இந்த மாதிரி ஏதாவது நடக்கலாம்.
அதான் கலிபுருஷன் ஆட்சிக்கு மீண்டும் வந்துவிட்டானே....
பாராக் ஓபாமா!
ஈரான், வடகொரியா, பாக்கீஸ்தான், ஸீரியா, யேமன்..... எத்தனையோ நாடுகள் பாக்கியிருக்கின்றனவே.
அன்புடன்
ஜெயபாரதி
No comments:
Post a Comment