ஹோம அக்னி
ஹோமம், யாகம் ஆகியவற்றுக்கு நெருப்பு உண்டாக்குவதில் சில
கட்டுப்பாடுகள், கட்டாயங்கள் இருந்தன.
சில ஹோமங்களுக்கு உரிய நெருப்பை இன்னொரு ஹோம
குண்டத்திலிருந்துதான் எடுக்கவேண்டும் என்ற நியதி இருந்தது. சில
ஹோமகுண்டங்களை அணையாமல் வைத்திருந்தார்கள். அவற்றிலிருந்து எடுக்கப்படும் நெருப்பைக் குறிப்பிட்ட சில ஹோமங்களால் பயன்படுத்தினார்கள்.
சில அக்கினி காரியங்களுக்கு எந்த மாதிரியான நெருப்பைப் பயன்படுத்த வேண்டும் என்பதில்கூட சில நியதிகள் இருந்தன.
சிலவற்றிற்கு தீக்கடை கோலைக் கடைந்து நெருப்பை உண்டாக்க வேண்டும்.
"என்னடா இது? 'எந்த மாதிரி நெருப்பு, அது இது' என்று சொல்லப்
படுகிறதே?" என்ற கேள்வி எழவேண்டும்.
தீக்கடை கோலால் ஏற்படுத்தும் நெருப்பு, சிக்கிமுக்கிக் கல்லால்
தோன்றும் நெருப்பு, காட்டுத்தீயின் நெருப்பு, எரிமலையின் நெருப்பு,
சூரியகாந்தக் கல்லால் தோன்றும் நெருப்பு, மூங்கில்கள் உரசிக் கொள்வதால் ஏற்படும் நெருப்பு என்றெல்லாம் பகுத்திருந்தார்கள்.
சில அக்கினிக்காரியங்களுக்கு அடுக்களை நெருப்பைப்
பயன்படுத்தினார்கள்.
இப்பவெல்லாம் அப்படியில்லை......
எல்லாத்துக்கும் தீப்பெட்டியின் பக்கவாட்டில் தீக்குச்சியை உரசி ஏற்படுத்தப்படும் நெருப்புத்தான்.
பல பூசாரிகள், சிவாச்சாரியார்கள் சிகரெட் லைட்டர் பயன்
படுத்துகிறார்கள்.
பாருங்க-ஸல்·பர்/·பாஸ்·பரஸ் நெருப்பு, ஆக்ட்டேன் நெருப்பு
என்றெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன.
அதான்....
காலம் மாறிப்போச்சு.
No comments:
Post a Comment