08-09-2012
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அகத்தியர் குழுவில் இதை எழுதினேன்.
அதற்கு மறுமொழியாக எல்லேய் சுவாமிநாதன் எழுதியிருந்தார். அதற்குப் பின்மொழியாக நான் எழுதினேன்.
இந்த மடல் பரிமாற்றம் நடந்து ஆறு ஆண்டுகள் ஆகின்றன.
இந்த குறுகிய கால வரையிலேயே பல மாற்றங்களைத் தமிழ் மொழிப் புழக்கத்தில் காணமுடிகிறது.
2020-இல் மலேசியத் தமிழ் இலக்கியம் எப்படி இருக்கும் என்று ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதித்தருமாறு 1997-ஆம் ஆண்டு சிங்கப்பூர்க் காரர் ஒருவர் கேட்டிருந்தார்.
அதையும் எழுதினேன்.
2020 வரைக்கும் காத்திருக்கவேண்டியதில்லை.
மலேசியத் தமிழ் இலக்கியத்தின் பல துறைகள் அதற்குள்ளாக மறைந்துபோய் விட்டன.
இதைப் பற்றி விரிவாக இன்னொரு மடலில் எழுதுகிறேன்.
மொழியில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி அல்லவா பேசிக்
கொண்டிருக்கிறோம்.
கீழ்க்கண்ட பரிமாற்றத்தைப் படித்துவிட்டு, உங்கள் கருத்துக்களையும் கணித்துப் பாருங்கள்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Date: Fri, 24 Nov 2006 07:37:51 -0000
Subject: [agathiyar] Fate of Languages
சில ஆண்டுகளுக்கு முன்னர் யூனெஸ்க்கொ நடத்திய கணிப்பின்படி அந்தச் சமயத்தில் ஆறாயிரத்து எழுநூற்றுச்சொச்சம் மொழிகள் இருந்தனவாம்.
அவற்றில் பாதி, மிகக்குறுகிய காலத்தில் மறைந்துவிடக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கியிருந்தன.
தற்காலத்தில் விளங்கும் Information Explosion, இடம் பெயர்தல், வேலை வாய்ப்புகள், படிப்பு, டீவீ, சினிமா, சமயத்தாக்கங்கள், அரசு மொழிகளின் ஆதிக்கம், வர்த்தகம், பெரும்பான்மையினர் பேசும் மொழிகளின் தாக்கம் முதலிய சில முக்கிய காரணங்களால் மொழிகளில் பெரும்பான்மையின அழிந்து போய் விடும் என்று யூனெஸ்க்கொ ஆய்வு கூறுகிறது.
பல மொழிகள் Pidginisation, Creolisation போன்ற மாற்றங்களுக்கும் ஆளாக நேரிடும்.
முக்கியமாக ஆதிவாசிகள் பேசும் மொழிகள் விரைவில் காணாமற் போகக்கூடும். நியூ கினீ என்னும் தீவு ஆஸ்திரேலியாவுக்கு வடக்கில் உள்ள பெருந்தீவு. உலகிலேயே நான்காவது பெரிய தீவு.
அந்த தீவில் எண்ணூற்று முப்பது மொழிகள் பேசப்படுகின்றன.
பலவற்றுக்கு எழுத்துக்கூட கிடையாது. பேச்சு மொழிதான். அவற்றில் பத்து மொழிகள் சமீபத்தில் பேசுவாரற்று மறைந்து போயின. மிச்சம் எண்ணூற்று இருபது மொழிகள் இருக்கின்றன.
நியூ கினீ தீவில் இரண்டு நாடுகள் உள்ளன. இந்தோனீசியாவின்
பகுதியான இரியான் ஜயாவும், தனிநாடாக விளங்கும் பாப்புவா நியூகினீயும்.
இந்தோனீசியாவின் அரசு மொழியாகிய பாஹாஸா இந்தொனேசியாவின் தாக்கம் இரியன் ஜயாவில் உண்டு.
பாப்புவா நியூகினியில் உள்ள முக்கிய மொழி Tok Pisin என்பது. அது Pidgin Talk என்னும் ஆங்கிலச்சொல்லின் மருவல். அங்குள்ள கஜபுஜ மொழிக் கதம்பம், சீனம், மலாய், ஆங்கிலம் ஆகியவற்றின் கசபுசாவெல்லாம் சேர்ந்து உருவாகியதுதான் பிட்ஜின் மொழி. அன்றாட வழக்கிற்காக அந்த மொழி உருவாகியது. ஆகவே அதனை Business மொழி என்று அழைத்தார்கள்.
அது தேய்ந்துபோய் பிட்ஜின் ஆகி, பிசின் ஆகி இப்போது அதிகாரபூர்வ மொழியாகிய Tok Pisin ஆக திகழ்கிறது.
இது ஒரு தினுசான Linguistic Evolutionதான்.
இன்னும் பத்து இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் மொழி எப்படி இருக்கும்?
At 01:56 PM 11/24/2006 -0800, LA Dr.Swaminathan wrote:
ஹியர் அண்ட் தேர் ஸ்மால் சேஞ்சஸ் இருக்கலாமே ஒழிய, டமில்ல பிக் சேஞ்சு இருக்காதுங்கறது என் ஒபினியன்.
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
JayBee Wrote:
தமிழ் எழுதப் படிக்கத்தெரிந்த தமிழர்களின் சதவிகிதம் குறையலாம்.
பேச்சில் இன்னும் Slang, சொற்களுக்குப் பதில் ஓரிரு எழுத்துக்களை பயன்படுத்துவது போன்ற வழக்குகளின் தாக்கங்கள் பெருமளவில் ஏற்படலாம்.
CUB4evngCHN - See you before evening in Chennai - இந்த மாதிரியான மாறுதல்கள் ஏற்படலாம். விவிசி - விழுந்துவிழுந்து சிரிக்கிறேன் போன்ற வழக்குகள் அதிகமாக ஏற்படும்.
1984 என்னும் இங்கிலீஷ் நாவலை 1949-ஆம் ஆண்டில் ஜார்ஜ் ஆர்வெல் என்னும் நாவலாசிரியர் எழுதினார். Animal Farm என்னும் நாவலை எழுதிய அதே ஆசாமிதான். "All animals are equal. But some animals are more equal than others", என்ற பிரபலமான வரி அதில்தான் வரும்.
Good, Better, Best, Excellent என்ற சொற்களுக்குப் பதிலாக
Good Plus, Good Plus Plus, Good Three Plus என்ற சொற்கள் பயன்படுத்தப் படும். Better, Best, Superb, Excellent எல்லாம் தடை செய்யப்பட்டுவிடும்.
இதெல்லாம் 1984-க்குள் நடந்துவிடக்கூடும் என்று ஆர்வெல் அந்த நாவலில் எழுதினார்.
ஆனால் அந்த அளவுக்கு ஏதும் நடந்துவிடவில்லை என்பதை நாம் யதார்த்தமாகக் காண்கிறோம்.
மேலே சுவாமிநாதன் ஸார் குறிப்பிட்டிருக்கும் பிட்ஜின் தமிழ் புழக்கத்திற்கு வரலாம்.
இப்போது இருக்கும் கொங்குத்தமிழ், நெல்லைத்தமிழ், நாஞ்சில் தமிழ், செட்டிநாட்டுத் தமிழ் போன்றவற்றின் புழக்கம் குறையலாம்.
இப்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் Info explosion ஒரு பிரதிகூல
சூழலையே ஏற்படுத்தும்.
மாரிஷியஸ், செஷல்ஸ், கரீபியன், க்யானா போன்ற இடங்களில் தமிழ் மறைந்ததுபோல இன்னும் பல குழுமங்களில்/இடங்களில் தமிழ்ப் புழக்கம் குறையலாம்/மறையலாம்.
யூஎஸ்ஸில் பிறந்துவளர்ந்த தமிழர்களின் பிள்ளைகளில்
பெரும்பாலோருக்குத் தமிழ் தெரியாது என்று சொல்கிறார்கள்.
தமிழ் இலக்கியத்தில் என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படும்
என்பது ABG, GOK. Anybody's Guess, God Only Knows.
>>>>>>>>>>>>>>>>>>
இந்த ஆறாண்டுகளில் எந்த அளவுக்கு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன?
அன்புடன்
ஜெயபாரதி
மொழி பரிணாமம்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment