யதார்த்தம்
தமிழில் உள்ள நூல்களில் ஒரு காலத்தில் முக்கியத்துவம் வகித்தவை 'நீதி நூல்கள்'.
உலகியல், வாழ்வியல், யதார்த்தங்கள், உண்மைகள், ஸைக்காலஜி என்னும் மனவியல், Behaviour Science, Reaction and Abreaction, பழக்க வழக்கங்கள், மரபியல், உவமையியல், தத்துவங்கள் போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய நூல்கள் இருந்தன.
குமரேச சதகம் போன்ற சதக நூல்கள், நீதிசாரம் போன்ற நூல்கள் அதிகமாகப் படிக்கப்பட்டன.
இந்த Trend இன்று நேற்று ஏற்பட்டவை என்று சொல்லமுடியாது.
புறநானூற்றிலேயே இந்த மாதிரியான கருத்துக்களையெல்லாம் காணலாம்.
மாதிரிக்கு ஒன்று.....
தெண்கடல் வளாகம் பொதுமையின்றி
வெண்குடை நிழற்றிய வொருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா வொருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே
இது புறநானூற்றுப் பாடல்.
என்ன அர்த்தம்?
கடலே எல்லையாகக் கொண்டு நிலம் முழுவதையும் வேறு யாருடனும்
பங்கிட்டுக்கொள்ளாமல் தாமே தமக்குரியதாக தம்முடைய வெண் கொற்றக் குடையின் கீழ் தம்முடைய ஏகபோக ஆட்சியில் ஆண்டிருப்பவரும் சரி;
நடுச்சாமமோ நடுப்பகலோ என்று பாராது இரவும் பகலுமாக தூங்காமல்
உணவுக்காக காடுகளில் இருக்கும் மிருகங்களைத் தேடி அவற்றை
வேட்டையாடுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட கல்வியில்லாத ஒருவருக்கும் சரி.......
உண்பது ஓர் ஆழாக்குப் படி உணவே
உடுப்பதுவும் அடிப்படையில் இரண்டே துணிகள்தாம்
இதைப் பாடியவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்னால் வாழ்ந்தவர்.
பிற்காலப் புலவர் ஒருவர் பாடிய ஓர் உலகியல் யதார்த்தப் பாடலையும்
பார்க்கலாம்.
அன்புடன்
ஜெயபாரதி
No comments:
Post a Comment