Monday, March 11, 2013
Written 12/03/2013
அன்பர்களே,
நேற்று ஒரு குறிப்பு எழுதியிருந்தேன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>.
என்னத்தைக் கண்டோம்?
வேதம், வேதாந்தம், ஆகமம், தந்திரம், இதிகாசம், புராணம், சாஸ்திரம்,
வித்யா, சடங்கு, சம்பிரதாயம், ஆசாரம், பூஜை, புனஸ்காரம், உபாசனை,
தியானம், அர்ச்சனை, ஜபம், தோத்திரம், துதி, நாமாவளி, உச்சாரணம்,
உச்சாடணம், ஹோ¡மம், யாகம், திருமுறை, தேவாரம், நாலாயிரம், -
இன்னும் இவை போன்ற பல சொற்கள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளவை.
ஆனால் இவை எவ்வெவற்றைக் குறிக்கின்றன என்ற மிக அடிப்படையான
விபரங்கள்கூட மலேசியத் தமிழ் இந்துக்களில் பெரும்பான்மையினருக்குத்
தெரியாது.
இவை இந்து சமயத்தின் முக்கியமான சொற்கள். அடிக்கடி யாராவது
பேச்சுவாக்கில் சொல்வார்கள்.
நான் சொல்வது உண்மையா இல்லையா என்று பரீட்சை செய்து
பார்க்கவேண்டியதுகூட இல்லை.
விவாதம் பண்ணவேண்டியதும் இல்லை
உங்களுக்கே தெரியும்.
>>>>>>>>>>>>>>>>>>>>
இது நான் எழுதியது.
அதன்பேரில் ஒரே ஓர் ஆள், 'உபாசனை, பூஜை, ஜபம்' பற்றி
கேட்டிருந்தார்.
இதையெல்லாம் பொது அரங்கத்தில் கேட்மாட்டார்கள். அதான் இருக்கே...... ச்சேட் மெஸேஜ். அதன்மூலம். என்ன கேட்கிறார்கள் என்பது
ஏன் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கிறார்கள் என்பது
அவர்களுக்குத்தான் தெரியும். அறியாமையை அம்பலப்படுத்துவானேன் என்ற
எண்ணமாக இருக்கலாம்.
கீழ்க்கண்ட விபரங்கள் நான் 2007-இல் எழுதிய மடலில் ஒரு பகுதி.
அதில் கொஞ்சம் சேர்மானம் சேர்த்து நகாஸ் வேலை செய்து அவருக்கு
மெஸேஜில் அனுப்பினேன்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மந்திரஜபம் முதலியவற்றைக் கைக்கொண்டு செய்யப்படும்
உபாசனைகளுக்குக் கிரமம் உண்டு.
இக்காலத்தில் அத்தனை ஆசார அனுஷ்டானங்களுடன் செய்வது
சிரமம்தான்.
மானச ஜபத்தைக் கைக்கொண்டால் வெளிப்படையான ஆசார
அனுஷ்டானங்கள் குறைந்துவிடும்.
எந்த அளவுக்குச் சடங்குகள் சம்பிரதாயங்களில் மனதைச்
செலுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுடைய உபாசனையின் மையப்பகுதி - முக்கியமாக கருப்பொருள் - அதன்மீது செலுத்தவெண்டிய கவனமும் ஈடுபாடும் குறைந்துவிடும்.
தற்காலத்து இளைஞர்கள் உபாசனை செய்யவேண்டும் என்று
எண்ணுவதில் தவறில்லை. வேலைகளுக்கும் நடுவில் செய்யவேண்டும் என்றால் அதற்கேற்றவகையில் அதை வைத்துக்கொள்ளலாம்.
KISS
Keep It Short and Sweet.
மிக நீளமான மந்திரமோ, உக்கிரமூர்த்திகளின் மந்திரங்களோதான்
மிகவும் ஆற்றல் உள்ளவை என்றும் நினைக்கக்கூடாது.
அதெல்லாம் ஒரு மாடர்ன் ட்ரெண்ட்.
'நாயோட்டும் மந்திரம்' என்று சித்தர்கள் மரபில் ஒரு ரகசிய
மந்திரத்தைக் குறிப்பிடுவார்கள்.
"நாயோட்டும் மந்திரம் நாதன் இருப்பிடம்
நாயோட்டும் மந்திரம் நாம் அறியோமே!"
அந்த 'நாயோட்டும் மந்திரம்' ஒரே ஓர் எழுத்துத்தான்.
தெய்வங்களுக்கு உரிய மூலமந்திரங்கள் ஓர் அட்சரத்திலிருந்து எட்டு அட்சரம் வரைக்கும் இருக்கும்.
நாயோட்டும் மந்திரம் சிவ பரம்பொருளுக்கு உரியது.
விநாயகருக்கு ஓர் அட்சரம். அம்பிகைக்கு ஓர் அட்சரம்,
சுப்பிரமணியருக்கு ஓர் அட்சரம், கிருஷ்ணருக்கு ஓர் அட்சரம்
என்றெல்லாம் இருக்கின்றன.
இவை ஜபத்துக்கும் தியானத்துக்கும் பயன்படக்கூடும்.
இந்த அட்சரங்களுக்கு மேல் பதினைந்து அட்சரம், அஷ்டாட்சரம்
என்றெல்லாம் நிறைய இருக்கின்றன.
'மாறல்' என்னும் முறையின் மூலம் சிவனுக்கு இருபத்தைந்து அட்சரங்கள்
வருமாறு செய்வார்கள்.
'சஹஸ்ராக்ஷரீ வித்யா' என்பது ஆயிரம் அட்சரங்களைக் கொண்டது.
பல அட்சரங்களைக் கொண்ட வலுமிக்க சுப்பிரமண்ய மந்திரம் கூட புழக்கத்தில் இருக்கிறது.
இவையெல்லாம் உபதேசக் கிரமப்படி வாங்கிக்கொள்ளவேண்டியவை.
'நமசிவாய' மந்திரத்துக்கு உபதேசமே தேவையில்லை என்று சில
சான்றோர் சொல்லியிருக்கிறார்கள்.
தட்சிணாமுர்த்தியே உபதேசித்துவிடுவார்.
குருவைத் தேடுபவர்களுக்கு மஹாதேசிகனான சிவனோ, முருகனோ,
அம்பிகையோ குருவாய் வருவார்கள் என்று சாஸ்திரங்கள் சொல்லும்.
அல்லது குருவை அனுப்புவார்கள்.
இன்னும் எழுதலாம்....
அன்புடன்
ஜெயபாரதி
Subscribe to:
Post Comments (Atom)
நன்றிங்க, டாக்டர். எல்லாமே புதிய செய்தி எனக்கு.
ReplyDeleteஇதைப் போன்ற அரிய விபரங்கள் கொண்ட மடல்கள் அகத்தியர் குழுவில் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவற்றிற்கு முதலிடம் கொடுத்து, படித்தீர்களானால் நம் பாரம்பர்யம் பாதுகாக்கப்படும்.
Delete