Thursday, March 21, 2013

LIES INTO TRUTHS


மெய்போலும்மே மெய்போலும்மே!

"பொய்யை மீண்டும் மீண்டும் அழுத்தமாக அடிக்கடி சொல்லிக்கொண்டே வந்தால் அது உண்மையாகத் தோன்றிவிடும். மக்களும் நம்பிவிடுவார்கள்."
இதைச் சொன்னவர் ஜோச·ப் கோயபல்ஸ் என்பவர். இவர் நாட்ஸி 
ஜெர்மனி என்று சொல்லப்படும் மூன்றாவது ரை·க் பேரரசின் பிரசார 
மந்திரியாக இருந்தவர். அதன் சர்வாதிகாரியாகிய அடா·ப்ல் ஹிட்லரின் 
அத்தியந்த நண்பர்.
                                                                                                                                                           உண்மையிலேயே அவருடைய பெயரை 'யோஸெ·ப் 
கபல்ஸ்' என்றுதான் ஜெர்மானிய முறையில் உச்சரிக்கவேண்டும்.



ஆனால் அவர்தான் முதன்முதலில் சொன்னார் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. 
பல காலமாக மதவாதிகளும் உயர்ஜாதியினரும் கையாண்ட காலங்
காலமாக வந்த உத்திதான் அது.
மக்யாவெல்லி என்ற பெயர் சிலருக்குப் பரிச்சயமாக இருக்கும். 
ஆரவல்லி, சூரவல்லியின் கடைசித் தங்கை என்று கப்சா அடிக்கலாம். 
அதையும் நம்பிவிடுவார்கள்.  இப்போது நிலவும் ·பேஸ்புக், விக்கிப்பீடியாவில் தலைவிரித்தாடும் தமிழிய ஜிங்கோயிஸம் ச்சாவினிஸம் போன்றவற்றில் இந்தப் போக்கைத்தானே நாம் அதிகம் பார்க்கமுடிகிறது.
நிக்கோலோ மக்யாவெல்லி என்பவர் ஒரு பயங்கர ராஜதந்திரி. 


அவர் பதினைந்து - பதினாறாம் நூற்றாண்டுகளில் இத்தாலியில் 
இருந்தவர். அவர் ராஜதந்திரி மட்டுமில்லை. ஒரு பல்துறைப் பேரறிஞர். 
வரலாற்றாசிரியர், தத்துவஞானி, எழுத்தாளர். கவிஞர், பாடலாசிரியர், 
இத்தாலிய கடித இலக்கியத்தின் மூலகர்த்தாக்களில் ஒருவர், அரசியல்வாதி. அரசியல்ஞானி. தற்கால அரசியவாதத் துறையின் சிருஷ்டியாளர். 
அவர் காலத்தில் இத்தாலி பல நாடுகளாக இருந்தது. போர்ஜியா, 
மெடிச்சி போன்ற சில பெரிய குடும்பத்தினரின் கைகளில் ·ப்லாரன்ஸ், 
ஜெனோவா, வெனிஸ் போன்ற சிறுநாடுகள் இருந்தன. சிறுநாடுகள். ஆனால் அங்குதான் ஐரோப்பிய ரெனைஸான்ஸ் எனப்படும் மறுபிறப்பு தோன்றியது. கலை, இலக்கியம், சிந்தனை மறுமலர்ச்சி, விஞ்ஞான ஆராய்ச்சிகள் போன்றவை வளர்ந்தன. லியோனார்டோ டாவின்ச்சி, மைக்கலேஞ்ஜெலோ, ர·பேயல் போன்றவர்கள் வாழ்ந்த இடம், வாழ்ந்த காலம். உலகின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு இந்த நாடுகள் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. போர்ஜியா குடும்பம் போப் ஆண்டவர் பதவியிலும் இருந்தது. மெடிச்சிகள் அவர்கள் பங்குக்கு கார்டினல் போன்ற பதவிகளில் இருந்தனர். 
மிகப் பெரிய பணக்காரர்கள். செட்டிநாட்டு பாஷையில் சொல்வதானால் லகிட்டுப் பணக்காரர்கள்.
போர்ஜியா குடும்பத்தைச்சேர்ந்த போப் ஆறாம் அலெக்ஸாண்டர் 
ஒழுக்கம் கெட்ட மகா அயோக்கியன். அவனுடைய மகனாகிய கெஸேர் 
போர்ஜியா அரக்ககுணமும் அதிகாரவெறியும் ஒழுங்கீனமும் கொண்டவன்.  
அவனை மாடலாக வைத்து மாக்யாவெல்லி THE PRINCE என்றொரு 
அர்த்த சாஸ்திர நூல் ஒன்றை எழுதினார். 
வெற்றியையும் குறிக்கோளையும் வைத்து செய்யப்படும் எந்தச் 
செய்கையிலும் ஒழுக்கம், தர்ம, நியாயம் போன்றவற்றைப் பார்க்கக் கூடாது என்று சொல்வார். அடையும் வெற்றியும் குறிக்கோளுமே செய்த காரியங்களை நியாயப் படுத்திவிடும் என்பது அடிப்படைக் கோட்பாடு. 
·பேஸ்புக்கிலும் விக்கிப்பீடியாவிலும் ஏராளமான பொய்களை எடுத்துக்கட்டி நிறையப் பரவவிட்டிருக்கிறார்கள். 
அவற்றை ஏராளமானோர் அப்படி அப்படியே நம்பிவிடுகிறார்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

No comments:

Post a Comment