அரதத்தர் கொடுத்த பாடம்
சிவ உபாசகர்களில் முன்னணியில் உள்ளவர் அரதத்த சிவாச்சாரியார் என்பவர்.
இவர் ஒரு ஸ்ரீவைஷ்ணவ குடும்பத்தில் பிறந்துவிட்டு,
சிவபெருமானிடமிருந்து பஞ்சாக்கர மந்திர உபதேசம் பெற்று,
சிவ உபாசனையில் ஈடுபட்டவர். தம் தந்தையாருடன் வாதிட்டு
வென்று அவருக்கும் பஞ்சாக்கரத்தை உபதேசித்தவர்.
அவர் ஒருமுறை காவிரிக்கரையில் நடந்து சென்று
கொண்டிருக்கும்போது பசியினால் வருந்திய புலையன் ஒருவனைக் கண்டார். அவனுக்குத் தாம் வைத்திருந்த கஞ்சியைக் கொடுத்து குடிக்கச்செய்தார்.
காவிரிக்கரையில் இருந்த ஓர் ஊரில் சோழ மன்னன்
ஒருவன் இருந்தான். பழங்காலத்தில் சோழநாட்டின் வெவ்வேறு
பகுதிகளில் ஒரே சமயத்தில் வேறு வேறு சோழமன்னர்கள் ஆண்டு
வந்ததுண்டு. காவிரிப்பூம்பட்டினத்தில் ஒருவர், பழையாறையில் ஒருவர், உறையூரில் ஒருவர் என்றவாறு இருந்தார்கள்.
அவர்களில் ஒரு சோழர்.
அவர் ஒரு தீவிர சிவபக்தர்.
அவர் தினந்தோறும் சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள்
செய்வார். சிவன் தினந்தோறும் அவருடைய கனவில் தோன்றுவார்.
அவர் அன்றைய தினம் இன்னும் சிறப்பாக அபிஷேகங்களைச்
செய்து, நிறைய நைவேத்தியங்களையும் படைத்து வழிபட்டார்.
ஆனால் அன்றிரவு சிவபெருமான் அவருடைய கனவில்
வரவில்லை.
அடுத்தநாள் அவர், நாள் முழுவதும் உண்ணாமல் விரதமிருந்து
வருத்தமும் குழப்பமும் மிகுந்து வழிபட்டவண்ணமிருந்தார்.
அன்றிரவு அவருடைய கனவில் சிவபெருமான் வந்தார்.
"நாம் நேற்று வராத காரணம் அரதத்தன் கொடுத்த கஞ்சியைக்
குடித்ததால் ஏற்பட்ட திருப்தியே. அதற்கு ஈடாக நீ படைக்கும் எந்த
நைவேத்தியமும் இருக்கமாட்டாது", என்றார் சிவன்.
அடுத்தநாள் காலையில் எழுந்தவுடன் சோழர் அரதத்தர்
இருக்கும் இடம் தேடிச்சென்றார்.
அவரை வணங்கி அவரைத் தம்முடைய குருவாக வரித்துக்
கொண்டார்.
தமக்கு மோட்சம் கிடைப்பதற்கு வழிகாட்டுமாறு கேட்டுக்
கொண்டார்.
காவிரிக்கரையில் இருக்கும் குறிப்பிட்ட ஏழு தலங்களையும்
ஒரே நாளில் தரிசித்து வழிபாடு செய்யும்படி அரதத்தர் சோழரிடம்
சொன்னார்.
அவர் சொன்னவண்ணம் சோழமன்னர் ஒரு குதிரையின்மீது
ஏறிக்கொண்டு, குதிரைக்காரன் வெண்கொற்றக்குடை பிடித்துவர
ஏழ்தலங்களுக்கும் சென்று வழிபட்டார்.
திருத்தல யாத்திரை பூர்த்தியாகியதும் புஷ்பகவிமானம் வந்தது.
சிவகணங்கள் குதிரையும் குடைபிடித்த குதிரைக்காரனையும்
சிவலோகத்துக்குக் அழைத்துச் சென்றனர்.
இதைக் கண்டு அயர்ந்துபோன சோழர் உடனடியாக அரதத்தரிடம் வந்து விபரத்தைச் சொன்னார்.
"நீரும் அவர்களைப்போல கால்நடையாகப் பதவிசாக திருத்தல வலம் வாரும்", என்று அரதத்தர் சொல்லிவிட்டார்.
சோழமன்னரும் அதேபோல செய்தவுடன் அவரையும் புஷ்பகவிமானத்தில் சிவகணங்கள் சிவலோகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இறைவனுக்கு மிகவும் விருப்பமானது ஆடம்பரமில்லாத நேரடியான பக்தியும் ஈடுபாடும். அத்துடன் மனித நேயம். மனித நேயத்திலும் மிகவும் தாழ்ந்தநிலையில் உள்ள, கஷ்டப்படும் மனிதர்களிடம் காட்டப்படும் மனிதநேயம்தான். இதுதான்
இந்துக்களிடம் மிக மிக மிக அரிதாக விளங்கும் விஷயமாயிற்றே?
இந்துக்களிடம் மிக மிக மிக அரிதாக விளங்கும் விஷயமாயிற்றே?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment