கல்லூரியின் ஹாஸ்டலுக்கு வெளியில்போகும் ஒரு சிறு பாதைக்கு
அருகில் கலெக்ட்டர் ஆ·பீஸ் போஸ்ட் ஆ·பீஸ¤க்கு அருகே ஒரு
சிறு மரம் இருந்தது.
அதன் அடியில் ஒரு டீன் ஏஜ் இளைஞன் பஞ்சர் ஒட்டும் பசை,
பழைய துணி, எண்ணெய், கற்றடிக்கும் பம்ப் ஆகியவை சகிதம் தரையை
நன்கு சுத்தம் செய்துவிட்டு அமர்ந்து தொழில் தொடங்கினான்.
ஒரே ஒரு அட்டையில் சட்டைக்குப் போடும் ராபின் ப்லூ நீலத்தால்
எழுதியிருந்தான்.
'சைக்கிள் ஆஸ்பத்திரி'.
எப்போதும் சிரித்த முகத்துடன் வெகு சுறுசுறுப்பாக வேலை
செய்துகொண்டேயிருப்பான்.
சில வாரங்களில் சில ஸ்பானர்கள், சுத்தியல், சங்கிலிகள்
முதலியவற்றுடன் சைக்கிள் 'ஓவராயில்', சிறு சிறு ரிப்பேர்கள்
செய்யலானான்.
காற்றடிக்க 10 பைசா.
கலெக்டர் ஆ·பீஸ், மருத்துவக்கல்லூரி வாடிக்கைகள் ஏராளம்.
இன்னும் சில வாரங்களில் பழைய சைக்கிள்கள் இரண்டு
இருந்தன. வாடகைக்கு.
இன்னும் சில வாரங்களில் புதிய சைக்கிள்கள். வாடகைக்கு.
நான் கடைசியாகப் பார்த்தபோது ஒரு சைக்கிள்கடையே அங்கு
இருந்தது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
No comments:
Post a Comment