நான் - #1
காஞ்சியில் எங்களாழ்வான் என்றொரு வைணவப்பேரறிஞர் இருந்தார்.
வரதகுரு என்பவர் காஞ்சியில் இருந்த இளைஞர். அவருடைய தந்தை
அவரை எங்களாழ்வானிடம் ஸ்ரீபாஷ்யம் என்னும் வைஷ்ண நூலின் விரிவுரையைப் பாடம் கேட்டு கற்றறிவதற்காக அனுப்பினார்.
எங்களாழ்வான் வீட்டு வாசல் கதவை வரதகுரு திறந்திருக்கிறார். அரவம் கேட்டு எங்களாழ்வான் "யார்ராது?" என்று கேட்டிருக்கிறார்.
ஏற்கனவே நன்கு பரிச்சயமான ஆளல்லவா. ஆகவே "நான் தான்
வந்திருக்கிறேன்" என்றார். குரலை அடையாளம் கண்டுபிடித்துவிடுவார் என்ற எண்ணம்.
"ஓஹோ. அப்படியா? நான் செத்தபிறகு வந்துபார்", என்று சொல்லிவிட்டார்.
அதிர்ச்சியுடன் வீடு திரும்பிய வரதகுரு தம் தந்தையாரிடம் விஷயத்தைச் சொன்னார்.
அவர் சிரித்துக்கொண்டே, "நான் என்னும் தன்மையில்லாமல் வந்து
பார்க்கச்சொல்கிறார். அது உண்மையிலேயே குருவிடம் ஸ்ரீபாஷ்யம் போன்ற ஒன்றைக் கேட்டுப் புரிந்து உணர்வதற்குத் தடையாக இருக்கும்"., என்றார்.
வரதர் மீண்டும் சென்றார்.
ஆழ்வான் மீண்டும் "யார்ராவன்?"
இம்முறை வரதர் மிகவும் பவ்வியமாக, "அடியேன் தாஸானுதாஸன்
ஸ்ரீமத் ராமானுஜதாஸன்", என்று சொல்லி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.
அதன்பின்......
பாடம் ஒழுங்காக நடந்தது. வரதகுரு தெளிவாகக் கற்றுக்கொண்டார்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
எங்களாழ்வான் வாழ்ந்த இடம் திருவெள்ளறை, அரங்கத்துக்கு அருகில்; சீடர் வாழ்ந்தது காஞ்சியில்
ReplyDeleteதேவ்