| ||||||||
|
ஓராண்டுக்கு முன்னர் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி: "நீங்கள் ஏன் மருத்துவத்தைப் பற்றி எழுதக்கூடாது? கேள்வி-பதில்கூட சொல்லலாமே?" இது அவ்வப்போது கேட்கப்படும்கேள்விதான். ரொம்ப நாட்களுக்கு முன்னரேயே ஒருவர் கேட்டதற்கு நான் கொடுத்த பதில்...... >>>>>>>>>>>>>>>>. ஓர் அன்பர், "மருத்துவத்தைப் பற்றி மடலாடல் குழு தமிழில் ஒன்றுகூட இல்லையே, ஏன்?", என்று கேட்டார். "அலோப்ப·தியிலா அல்லது சித்தவைத்தியம், ஆயுர்வேதம் போன்றவற்றிலா?" என்று அவரைக் கேட்டேன். "இரண்டிலுமே பார்த்ததில்லை", என்றார். ஆமாம். இந்தத் துறைகளில் ஏதும் மடற்குழு இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது தமிழில். அலோப்ப·தியின் பல பிரிவுகளில் பல மடற்குழுக்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. பல வியாதிகளுக்கென்று தனித்தனி மடற்குழுக்கள் இருக்கின்றன. நோயாளிகள், டாக்டர்கள் ஆகியோர் பங்கு பெறும் குழுக்கள் அவை. Alternative Medicine என்னும் பெயரில்கூட பல குழுக்கள் அலோப்ப·தி தவிர்த்த பிற துறைகளில் இருக்கின்றன. அவருக்குப் பதில் எதையாவதைச் சொல்லவேண்டுமே. ஆகவே சொன்னேன்: "எல்லா அலோபதி டாக்டர்களும் ரொம்ப பிஸியா இருக்கிறாங்களோ என்னமோ. இப்பவெல்லாம் அவுங்ககிட்ட பேசுறதுக்குக்கூட காசு கொடுக்கணும் போல்ருக்கு. ரிட்டயர் ஆன டாக்டர் யாராவது, நீங்க சொன்னாப்புல மடற்குழு ஆரம்பிச்சாத்தான் உண்டு. இருக்கிற ஒண்ணு ரெண்டு பேரும்கூட தமிழப்பத்திய்ல எழுதிக்கிட்டு இருக்காங்க்ய.....?" விளையாட்டுக்கு அவரிடம் அப்படிச் சொன்னேன். ஆனால் அது ஒரு நல்ல யோசனை. பலருக்கு உபயோகப்படும்வகையில் அதைச் செயல்படுத்த நிச்சயம் முடியும். >>>>>>>>>>>>>>>>>>>.. இதை நான் எழுதிய காலகட்டத்தில் வலைத்தளங்கள் இருந்தன. ஆனால் ப்லாகுகள் தோன்றவில்லை. ·பேஸ்புக் கூட மிக அண்மையில் தோன்றியதாயிற்றே. மாற்று மருத்துவம் என்னும் ஆல்ட்டர்நேட்டிவ் மெட்ஸின் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கிறதா என்று பாருங்கள்? தமிழில் எவ்வளவோ இல்லை. ஆனால் தமிழில் மட்டும் 30000 ப்லாகுகள் இருப்பதாக இணையத்துப் பழம்புலி ஒருவர் சொன்னார். அதில் என்னுடைய ப்ன்னிரண்டு புலாகுகளையும் சேர்த்தாரா இல்லையா என்பது தெரியவில்லை. ·பேஸ்புக்கில்மட்டும் ஐந்து லட்சம் தமிழர்கள் இருப்பதாக மலேசியாக் காரர் ஒருவர் சொன்னார். மலேசியத் தமிழர்கள் மட்டுமே ஆயிரக் கணக்கில் இருப்பதாகச் சொன்னார். சுங்கைப் பட்டாணி தமிழர்களே எனக்குத் தெரிந்து எண்ணூற்றுச்சொச்சம் பேர் இருக்கிறார்கள். எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால், "இவ்வளவு இருந்தும் மருத்துவம் என்னும் இன்றியமையாத முக்கியமான துறை¨யைப் பற்றி தமிழில் மிக மிக மிகக் குறைவாகவே இருக்கிறதே!" என்பதுதான். நம்ம ஆட்களின் பார்வை கீர்வை, நோட்டம், நாட்டமெல்லாமே எங்கோ சிதறிப் பாய்கின்றன. மதுரை மருத்துவக் கல்லூரிக்காக ஒரு குறிப்பிட்ட ·பேஸ்புக். அதில்போய் தமிழ் வருடப் பிறப்பை மாற்றியது குறித்து காரசாரமாக ஒருவர் எழுதினார். >>>>>>>>>>>>>>>>>>>>>>>> அதற்கு நான் எழுதினேன் - DrJaya Barathi: "Better to confine the dealings to our college, college life, professors, outstanding medicos, post-studies experiences/adventures, and good old Madurai. Better refrain from topics like new year. There are other FaceBook venues, blogs, discussion groups, etc, for such topics". August 29 at 12:25pm Madurai Medicos and 5 others like this. Ranjith Veeramani: "Aaanalum neenga romba strict a irukeenga sir . .!" >>>>>>>>>>>>>>>>>>>>>>>>> ஆமாம்.... பாருங்கள்....... கல்லூரி, கல்லூரி வாழ்க்கை, மருத்துவப் படிப்பு, படித்தபின் ஏற்படும் அனுபவங்கள், வேலை வாய்ப்புக்கள், மதுரை, மறக்கப்பட முடியாத மாணவர்கள்/ஆசிரியர்கள்...... இப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஒரு சில டாக்டர்கள் ஒரு கூட்டமைப்பாக வைத்துக்கொண்டு மருத்துவ விளக்கங்கள் ஆலோசனைகள் ஆகியவற்றையும்கூட கொடுக்கலாம். நோயாளிகள் ஏமாறாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கலாம், அல்லவா. இதற்கென்று விஜயகாந்த் விஜிலன்ஸ் வரவேண்டுமா, என்ன
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
|
Sunday, December 23, 2012
WHY NO WESTERN MEDICINE WEB IN TAMIL?
Friday, November 16, 2012
KARMAS -#1
KARMAS
There is something known as 'Prabathi' margam or path. Simply put, it is the path of total surrender to God.
There are three types of karma which accrue during life. Praartham, Sanjitham, and Aakaamyam. What is the nature of these karmas? Why are they three? A karma is a karma - by whatever name you may call it. But why have three? Instead of one? May be one of these days, I will try to explain this in very very simple terms.
A person has to live out the outcome of his past karmas. But in the proses, he obtains more karmas. This accumulated karma might be lived out during the same life. Or it may determine the next birth and be carried forward into the next birth.
So, it goes about that the next karma is determined and whatever happens therein is already ordained.
And the Supreme God is the Lord and Master of everything that happens.
What you get in life is what has been given.
There is nothing you should do.
The duty of a thinking living being, is to surrender totally to God. Let Him/Her decide on what He/She wishes to give/do.
Dont try to know the future.
With that knowledge, your actions might get modified voluntarily or involuntarily.
What will you do?
Whatever you do would defy the Overlordship of the Lord Himself.
So, Prabathi marga in its absolute form prohibits consulting the predictive sciences like astrology, palmistry, etc.
Dont dabble with what is in store.
Whatever will be, will be.
Que Sera Sera.
There is lot more to write......
Regards
JayBee

Friday, November 9, 2012
MAYAN ERA AND KALI YUGA #101112
[agathiyar ] MAYAN ERA AND KALI YUGA(Tamil unicode)
Inbox
x
Inbox
|
9:24 AM (8 minutes ago)
![]() | ![]() ![]() | ||
| ||||
அன்பர்களே,
அடிக்கடி யாராவது 21-12-2012-இல் என்ன நடக்கும் என்று கேட்டுக்
கொண்டேயிருக்கிறார்கள்.
மாயான்களின் காலண்டர்படி அவர்களின் பஞ்சாங்கம் முடிகிறது.
'முடிந்த பிறகு என்ன?' என்பதை அவர்களின் பஞ்சாங்கம் ஒன்றும் சொல்லவில்லை.
இதோ பாருங்கள்......
3102 BC -யில் துவாபர யுகம் முடிந்தது. கலியுகம் ஆரம்பமாகியது. இது நம்ம பஞ்சாங்கம். வருசமாசந்தேதி நாழிகை முதற்கொண்டு நல்ல ஆட்களும் கணிக்கத்தான் செய்திருக்கிறார்கள்.
நம்ம யுகாப்த பஞ்சாங்கத்தின்படி கலியுகத்தில் இன்னும் நாலு லட்சத்துச் சொச்சம் வருஷம் பாக்கியிருக்கிறது.
துவாபர யுக முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்து கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் கலியுகம் தோன்றியது.
கலி தோன்றியதும் பாண்டவர்கள் ஜெயித்துவிட்டார்கள்.
இன்னும் Fine-Tuning செய்து பார்த்தால் துவாபர யுகம் முடிந்த
நேரத்தைக்கூட துல்லியமாகச் சொல்வார்கள்.
தர்மபுத்திரராகிய யுதிஷ்டிரர் - பாண்டவர்களில் மூத்தவர் - பொய்
சொன்ன நேரத்தில் துவாபரம் முடிந்து கலியுகம் பிறந்ததாகச் சொல்வார்கள்.
அதான்.... அந்த "அஸ்வத்தாம ஹத: <குஞ்சர:> episode.
அதுவரை தரையைத் தொடாமல் ஒரு ஜாண் உயரத்தில் ஓடிக்கொண்டிருந்த தர்மபுத்திரரின் தேர் உடனேயே தரை தட்டி, தரையின்மேல் ஓட ஆரம்பித்தது என்பார்கள்.
அதன்பின்னர் கலியுகத்தின் ஆரம்பத்துடன் பாண்டவர்கள் ஆட்சி
தொடங்கிவிட்டது.
பின்னர் துவாரகை அழிந்துபோய், கிருஷ்ணபரமாத்மாவின் அவதாரமும் முடிந்துவிட்டது.
இந்த மாதிரி ஏதாவது நடக்கலாம்.
அதான் கலிபுருஷன் ஆட்சிக்கு மீண்டும் வந்துவிட்டானே....
பாராக் ஓபாமா!
ஈரான், வடகொரியா, பாக்கீஸ்தான், ஸீரியா, யேமன்..... எத்தனையோ நாடுகள் பாக்கியிருக்கின்றனவே.
அன்புடன்
ஜெயபாரதி
Friday, November 2, 2012
Art Of War-#1
[agathiyar] A INTERESTING RAMBLE(Must Read) - (Tamil unicode)
http://groups.yahoo.com/group/agathiyar/message/53033
- FROM:
- TO:
சிதறிக்கிடந்த சீனாவை ஒன்றிணைத்து அதற்குத் தன் பெயரையே வைத்த முதல் சீனச் சக்கரவர்த்தி சின் ஷீ ஹுவாங் ட்டீ
அன்பர்களே,
தற்சமயம் சீனர்கள் தங்களுடைய வரலாற்றைப் பற்றி மிகவும் நுணுகி ஆராய்ந்துவருகிறார்கள். அவர்களுடைய அகழ்வாராய்ச்சிகள் பிரம்மாண்டமான அளவில் நடைபெறுகின்றன. பழஞ்சீன நூல்களும் பெரும் அளவில் ஆராயப்படுகின்றன,
அவற்றிலிருந்து இதுவரை பெறப்பட்ட விபரங்களின் அளவும் ஆழமும் தன்மையும் வியப்படையச் செய்கின்றன.
ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப் பட்ட பல கருவிகளை அவற்றின் எச்சங்களிளிருந்து புணரமைப்புசெய்து கண்டுபிடித்திருக்கிறார்கள். மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
அதனை பெரிய நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான தலைமுறைகளைச் சேர்ந்த கோடிக் கணக்கான படைவீரர்களில் 'வில்லிகள்' எனப்படும் வில் வீரர்கள் பயன்படுத்திய அத்தனை அம்புகளும் ஒரே நீளம் ஒரே மாதிரியான அமைப்பு, ஒரே மாதிரியான கனம் முதலியவற்றைக் கொண்டிருந்தன. Standardisation
என்பதன் உச்சகட்டத்தைப் பழங்காலச் சீனர்கள் எட்டி யிருந்தனர்.
தன் மீது எய்யப்பட்ட அம்பை எடுத்து தன்னுடைய வில்லிலேயே பூட்டி, நாணிழுத்து, தன் மீது எய்தவன்மேல் அவன் எய்த அம்பையே எய்யமுடியும். அந்த அளவுக்கு இருந்தது. ஒரே மாதிரியான விற்கள். ஒரே மாதிரியான அம்புகள்.
இது போலவே பலவற்றிற்கும் நிர்ணயிக்கப்பட்ட செய்முறைகள், விதிகள் இருந்தன.
இந்த மாதிரியான Standardisation நம்ம ஆட்களிடம் இருந்ததா?
முயற்சி செய்திருக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட காசில் எத்தனை பங்கு வெள்ளி, செம்பு ஆகியவை இருக்கவேண்டும், அதன் குறுக்களவு எவ்வளவு, அதன் கனமும் எடையும் எவ்வளவு என்பதற்கெல்லாம் விதிகளை ஏற்படுத்தியிருந்தார்கள்.
கௌட்டில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் விலாவாரியாகக் காணலாம்.
சுக்கிரநீதியிலும் காணலாம்.
அந்த விதிகளையெல்லாம் நம்ம ஆட்கள் கடைபிடித்தனரா?
இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
வேதங்களின் துணை நூல்களான உபவேதங்கள் நான்கு இருந்தன. ஆயுர்வேதம், காந்தர்வ வேதம், அர்த்த சாஸ்திரம், தனுர்வேதம்.
இவற்றில் ஆயுர்வேதம் என்பது வைத்திய சாஸ்திரம்.
காந்தர்வ வேதம் என்பது இசை நூல்.
அர்த்தசாஸ்திரம் என்பது பொருள் நூல்.
தனுர்வேதம் என்பது போரியல் நூல்.
தனுர்வேதத்திற்கு Derivative நூல்கள் ஏராளமாக இருந்திருக்க வேண்டும்.
திருக்குறளிலும் பொருள் அதிகாரத்தில் போரியல் விபரங்களைக் காணலாம்.
பொதுப்படையான போரியல் விதிகளைச் சொல்லி யிருக்கிறார். அந்த விதிகளில் பலவற்றைத் தற்காலப் போர்களுக்குள் இணைத்துப் பார்க்கமுடியும். பார்த்திருக்கிறேன். இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பானியத் தளபதியாகிய General Tomoyuki Yamashita நடத்திய Malaya Campaign and Fall Of Singapore என்னும் போரில் இணைத்துப் பார்த்திருக்கிறேன்.
பெரும்பாலும் நமக்குள் நடந்துகொண்டிருந்த போர்களில் இந்த போரியல் முறைகள் செல்லுபடியாகி இருந்தன.
ஆனால் அவை வெளிநாட்டுக்காரர்களிடம் பலிக்கவில்லை என்பதை நம் வரலாற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். ஹைடாஸ்ப்பெஸ், பானிப்பட் போன்ற போர்கள் சில உதாரணங்கள்.
அவர்களுடைய போர்முறைகளுக்கு மாற்றாக வேறு வேறு உத்திகள், வியூகங்கள், போர் முறைகள், ஆயுதங்கள் முதலியவற்றை நாமும் கண்டுபிடித்து கையாளும்போதும் நாம் பல சமயங்களில் வெற்றி பெற்றோம்.
வின்ஸ்ட்டன் சர்ச்சில் ஒருமுறை சொன்னார். அப்போது ஹிட்லரிடம் பல நாடுகள் தோற்றுப்போய் கைப்பற்றப் பட்டுவிட்டன. துணையின்றி ப்ரிட்டன் தனியாக நின்று போரிட்ட காலம்.
"We are prepared to lose many battles, as long as we win the last one".
"எத்தனை போர்களில் வேண்டுமானாலும் நாம் தோற்கத் தயார்தான். ஆனால் அந்த கடைசிப் போரில் மட்டும் நாம் ஜெயித்தால் போதும்."
ஆனால்......
எவ்வளவுதான் பலமும் திறமையும் இருந்தும்......
நாம் அந்தக் கடைசிப் போர்களில் தோற்றிருக்கிறோம்.
ஏன்?

Sunday, October 28, 2012
HOMA AGNI
ஹோம அக்னி
ஹோமம், யாகம் ஆகியவற்றுக்கு நெருப்பு உண்டாக்குவதில் சில
கட்டுப்பாடுகள், கட்டாயங்கள் இருந்தன.
சில ஹோமங்களுக்கு உரிய நெருப்பை இன்னொரு ஹோம
குண்டத்திலிருந்துதான் எடுக்கவேண்டும் என்ற நியதி இருந்தது. சில
ஹோமகுண்டங்களை அணையாமல் வைத்திருந்தார்கள். அவற்றிலிருந்து எடுக்கப்படும் நெருப்பைக் குறிப்பிட்ட சில ஹோமங்களால் பயன்படுத்தினார்கள்.
சில அக்கினி காரியங்களுக்கு எந்த மாதிரியான நெருப்பைப் பயன்படுத்த வேண்டும் என்பதில்கூட சில நியதிகள் இருந்தன.
சிலவற்றிற்கு தீக்கடை கோலைக் கடைந்து நெருப்பை உண்டாக்க வேண்டும்.
"என்னடா இது? 'எந்த மாதிரி நெருப்பு, அது இது' என்று சொல்லப்
படுகிறதே?" என்ற கேள்வி எழவேண்டும்.
தீக்கடை கோலால் ஏற்படுத்தும் நெருப்பு, சிக்கிமுக்கிக் கல்லால்
தோன்றும் நெருப்பு, காட்டுத்தீயின் நெருப்பு, எரிமலையின் நெருப்பு,
சூரியகாந்தக் கல்லால் தோன்றும் நெருப்பு, மூங்கில்கள் உரசிக் கொள்வதால் ஏற்படும் நெருப்பு என்றெல்லாம் பகுத்திருந்தார்கள்.
சில அக்கினிக்காரியங்களுக்கு அடுக்களை நெருப்பைப்
பயன்படுத்தினார்கள்.
இப்பவெல்லாம் அப்படியில்லை......
எல்லாத்துக்கும் தீப்பெட்டியின் பக்கவாட்டில் தீக்குச்சியை உரசி ஏற்படுத்தப்படும் நெருப்புத்தான்.
பல பூசாரிகள், சிவாச்சாரியார்கள் சிகரெட் லைட்டர் பயன்
படுத்துகிறார்கள்.
பாருங்க-ஸல்·பர்/·பாஸ்·பரஸ் நெருப்பு, ஆக்ட்டேன் நெருப்பு
என்றெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன.
அதான்....
காலம் மாறிப்போச்சு.
Saturday, October 6, 2012
FATE OF LANGUAGES(Review)
08-09-2012
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அகத்தியர் குழுவில் இதை எழுதினேன்.
அதற்கு மறுமொழியாக எல்லேய் சுவாமிநாதன் எழுதியிருந்தார். அதற்குப் பின்மொழியாக நான் எழுதினேன்.
இந்த மடல் பரிமாற்றம் நடந்து ஆறு ஆண்டுகள் ஆகின்றன.
இந்த குறுகிய கால வரையிலேயே பல மாற்றங்களைத் தமிழ் மொழிப் புழக்கத்தில் காணமுடிகிறது.
2020-இல் மலேசியத் தமிழ் இலக்கியம் எப்படி இருக்கும் என்று ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதித்தருமாறு 1997-ஆம் ஆண்டு சிங்கப்பூர்க் காரர் ஒருவர் கேட்டிருந்தார்.
அதையும் எழுதினேன்.
2020 வரைக்கும் காத்திருக்கவேண்டியதில்லை.
மலேசியத் தமிழ் இலக்கியத்தின் பல துறைகள் அதற்குள்ளாக மறைந்துபோய் விட்டன.
இதைப் பற்றி விரிவாக இன்னொரு மடலில் எழுதுகிறேன்.
மொழியில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி அல்லவா பேசிக்
கொண்டிருக்கிறோம்.
கீழ்க்கண்ட பரிமாற்றத்தைப் படித்துவிட்டு, உங்கள் கருத்துக்களையும் கணித்துப் பாருங்கள்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
Date: Fri, 24 Nov 2006 07:37:51 -0000
Subject: [agathiyar] Fate of Languages
சில ஆண்டுகளுக்கு முன்னர் யூனெஸ்க்கொ நடத்திய கணிப்பின்படி அந்தச் சமயத்தில் ஆறாயிரத்து எழுநூற்றுச்சொச்சம் மொழிகள் இருந்தனவாம்.
அவற்றில் பாதி, மிகக்குறுகிய காலத்தில் மறைந்துவிடக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கியிருந்தன.
தற்காலத்தில் விளங்கும் Information Explosion, இடம் பெயர்தல், வேலை வாய்ப்புகள், படிப்பு, டீவீ, சினிமா, சமயத்தாக்கங்கள், அரசு மொழிகளின் ஆதிக்கம், வர்த்தகம், பெரும்பான்மையினர் பேசும் மொழிகளின் தாக்கம் முதலிய சில முக்கிய காரணங்களால் மொழிகளில் பெரும்பான்மையின அழிந்து போய் விடும் என்று யூனெஸ்க்கொ ஆய்வு கூறுகிறது.
பல மொழிகள் Pidginisation, Creolisation போன்ற மாற்றங்களுக்கும் ஆளாக நேரிடும்.
முக்கியமாக ஆதிவாசிகள் பேசும் மொழிகள் விரைவில் காணாமற் போகக்கூடும். நியூ கினீ என்னும் தீவு ஆஸ்திரேலியாவுக்கு வடக்கில் உள்ள பெருந்தீவு. உலகிலேயே நான்காவது பெரிய தீவு.
அந்த தீவில் எண்ணூற்று முப்பது மொழிகள் பேசப்படுகின்றன.
பலவற்றுக்கு எழுத்துக்கூட கிடையாது. பேச்சு மொழிதான். அவற்றில் பத்து மொழிகள் சமீபத்தில் பேசுவாரற்று மறைந்து போயின. மிச்சம் எண்ணூற்று இருபது மொழிகள் இருக்கின்றன.
நியூ கினீ தீவில் இரண்டு நாடுகள் உள்ளன. இந்தோனீசியாவின்
பகுதியான இரியான் ஜயாவும், தனிநாடாக விளங்கும் பாப்புவா நியூகினீயும்.
இந்தோனீசியாவின் அரசு மொழியாகிய பாஹாஸா இந்தொனேசியாவின் தாக்கம் இரியன் ஜயாவில் உண்டு.
பாப்புவா நியூகினியில் உள்ள முக்கிய மொழி Tok Pisin என்பது. அது Pidgin Talk என்னும் ஆங்கிலச்சொல்லின் மருவல். அங்குள்ள கஜபுஜ மொழிக் கதம்பம், சீனம், மலாய், ஆங்கிலம் ஆகியவற்றின் கசபுசாவெல்லாம் சேர்ந்து உருவாகியதுதான் பிட்ஜின் மொழி. அன்றாட வழக்கிற்காக அந்த மொழி உருவாகியது. ஆகவே அதனை Business மொழி என்று அழைத்தார்கள்.
அது தேய்ந்துபோய் பிட்ஜின் ஆகி, பிசின் ஆகி இப்போது அதிகாரபூர்வ மொழியாகிய Tok Pisin ஆக திகழ்கிறது.
இது ஒரு தினுசான Linguistic Evolutionதான்.
இன்னும் பத்து இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் மொழி எப்படி இருக்கும்?
At 01:56 PM 11/24/2006 -0800, LA Dr.Swaminathan wrote:
ஹியர் அண்ட் தேர் ஸ்மால் சேஞ்சஸ் இருக்கலாமே ஒழிய, டமில்ல பிக் சேஞ்சு இருக்காதுங்கறது என் ஒபினியன்.
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
JayBee Wrote:
தமிழ் எழுதப் படிக்கத்தெரிந்த தமிழர்களின் சதவிகிதம் குறையலாம்.
பேச்சில் இன்னும் Slang, சொற்களுக்குப் பதில் ஓரிரு எழுத்துக்களை பயன்படுத்துவது போன்ற வழக்குகளின் தாக்கங்கள் பெருமளவில் ஏற்படலாம்.
CUB4evngCHN - See you before evening in Chennai - இந்த மாதிரியான மாறுதல்கள் ஏற்படலாம். விவிசி - விழுந்துவிழுந்து சிரிக்கிறேன் போன்ற வழக்குகள் அதிகமாக ஏற்படும்.
1984 என்னும் இங்கிலீஷ் நாவலை 1949-ஆம் ஆண்டில் ஜார்ஜ் ஆர்வெல் என்னும் நாவலாசிரியர் எழுதினார். Animal Farm என்னும் நாவலை எழுதிய அதே ஆசாமிதான். "All animals are equal. But some animals are more equal than others", என்ற பிரபலமான வரி அதில்தான் வரும்.
Good, Better, Best, Excellent என்ற சொற்களுக்குப் பதிலாக
Good Plus, Good Plus Plus, Good Three Plus என்ற சொற்கள் பயன்படுத்தப் படும். Better, Best, Superb, Excellent எல்லாம் தடை செய்யப்பட்டுவிடும்.
இதெல்லாம் 1984-க்குள் நடந்துவிடக்கூடும் என்று ஆர்வெல் அந்த நாவலில் எழுதினார்.
ஆனால் அந்த அளவுக்கு ஏதும் நடந்துவிடவில்லை என்பதை நாம் யதார்த்தமாகக் காண்கிறோம்.
மேலே சுவாமிநாதன் ஸார் குறிப்பிட்டிருக்கும் பிட்ஜின் தமிழ் புழக்கத்திற்கு வரலாம்.
இப்போது இருக்கும் கொங்குத்தமிழ், நெல்லைத்தமிழ், நாஞ்சில் தமிழ், செட்டிநாட்டுத் தமிழ் போன்றவற்றின் புழக்கம் குறையலாம்.
இப்போது ஏற்பட்டுக்கொண்டிருக்கும் Info explosion ஒரு பிரதிகூல
சூழலையே ஏற்படுத்தும்.
மாரிஷியஸ், செஷல்ஸ், கரீபியன், க்யானா போன்ற இடங்களில் தமிழ் மறைந்ததுபோல இன்னும் பல குழுமங்களில்/இடங்களில் தமிழ்ப் புழக்கம் குறையலாம்/மறையலாம்.
யூஎஸ்ஸில் பிறந்துவளர்ந்த தமிழர்களின் பிள்ளைகளில்
பெரும்பாலோருக்குத் தமிழ் தெரியாது என்று சொல்கிறார்கள்.
தமிழ் இலக்கியத்தில் என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படும்
என்பது ABG, GOK. Anybody's Guess, God Only Knows.
>>>>>>>>>>>>>>>>>>
இந்த ஆறாண்டுகளில் எந்த அளவுக்கு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன?
அன்புடன்
ஜெயபாரதி
மொழி பரிணாமம்

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Friday, October 5, 2012
PEY KARUMBU
பேய்க்கரும்பு
பட்டினத்தார் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா?
தாடி மீசையுடன், இடையில் கோவணத்தைத் தரித்துக்கொண்டு,
திருநீறணிந்து கொண்டு, கையில் ஒரு கரும்பைத் தூக்கிக் கொண்டிருப்பதாகக் காட்டியிருப்பார்கள்.
அது சாதாரணக் கரும்பு இல்லை.
பேய்க்கரும்பு என்பார்கள்.
அதை ஏன் அவர் கையில் வைத்துக்கொண்டிருக்கிறார்?
அதற்கு ஒரு பின்னணி உண்டு.
பட்டினத்தார் ஒருமுறை ஓரிடத்தில் தியானத்தில் இருந்தார்.
அப்போது அந்தப் பக்கத்தில் இருந்த தடாகத்தில் அந்த நாட்டின் அரசி குளித்துக்கொண்டிருந்தார். அவருடைய நகைகளை கரையில் கழற்றி வைத்துவிட்டு குளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு திருடன் அந்த ஆபரணக் குவியலைக் கண்டான். அதில் இருந்த மிக உயர்ந்த முத்துமாலையை எடுத்துக்கொண்டு ஓடினான்.
காவலர்கள் பார்த்துவிட்டார்கள். ஆகையால் அவனை விரட்டிக் கொண்டு அவர்களும் ஓடினார்கள்.
பட்டினத்தார் தியானத்தில் இருந்த இடத்திற்கு வந்த திருடன், இனி எப்படியும் காவலர்கள் பிடித்துவிடுவார்கள் என்ற நிலையில் தன்னிடமிருந்த முத்துமாலையைப் பட்டினத்தார் கழுத்தில் போட்டு விட்டு ஓடிவிட்டான்.
அங்கு வந்த காவலர்கள் பட்டினத்தார் கழுத்தில் மாலையைப் பார்த்தவுடன் அவரை இழுத்துக்கொண்டு அரசன் முன் கொண்டு சென்றார்கள்.
அந்த நாட்டின் அரசர் பர்த்ருஹரி.
அவரிடம் விசாரணைக்குக் கொண்டுவரப்பட்ட பட்டினத்தாரைக்
காவலர்கள் காட்டி பட்டினத்தார்தான் முத்துமாலையைத் திருடிவிட்டார் என்று குற்றஞ்சாட்டினார்கள்.
உடனேயே பர்த்ருஹரி பட்டினத்தாரைக் கழுவில் ஏற்றிவிடுமாறு ஆக்ஞை பிறப்பித்தார்.
காவலர்கள் பட்டினத்தாரை இழுத்துச் சென்று கழுமரத்தை நாட்டி அதில் அவரைச் செருகிவிடப் போனார்கள்.
அப்போது பட்டினத்தார் கழுமரத்தைப் பார்த்து, "முன்செய்த தீவினைதான் இங்ஙனே வந்து மூண்டதுவோ!", என்றார்.
அப்படிச் சொன்னமாத்திரத்தில் கழுமரம் தீப்பிடித்து எரிந்து சாம்பலாயிற்று.
காவலர்கள் ஓடிச்சென்று அரசரிடம் விஷயத்தைச் சொன்னார்கள்.
அரசர் ஓடிவந்தார்.
பட்டினத்தார் கால்களில் விழுந்தார்.
பட்டினத்தார் ஒன்றுமே சொல்லாமல் அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
ராஜா பர்த்ருஹரி தன்னுடைய ஆடைகளையெல்லாம் களைந்து எறிந்துவிட்டு, கோவணத்தைக் கட்டிக்கொண்டு பட்டினத்தார் பின்னால் போனார்.
பத்திரகிரியார் என்ற பெயரில் பட்டினத்தாருடன் சென்றவர் பிச்சை
எடுக்கலானார்.
தமக்கும் பட்டினத்தாருக்கும் சேர்த்துப் பிச்சையெடுத்துக்கொண்டு
வருவார்.
இரண்டு பேருக்குச் சோறு வாங்குவதென்றால் இருகைகளில் ஏந்திக்
கொண்டுவரமுடியவில்லை.
ஆகவே ஒரு குயவனிடம் சென்று ஒரு சட்டியைப் பிச்சையாக வாங்கிக் கொண்டார். அதுவே அவருக்குப் பிச்சைப் பாத்திரமாகிவிட்டது.
அதில் அவர் பிச்சையெடுத்துக்கொண்டு வந்து பட்டினத்தாரிடம்
கொடுப்பார். அவர் உண்டதுபோக மீதியைப் பத்திரகிரியார் சாப்பிடுவார்.
சில நாட்களில் ஒரு பெட்டைநாய் அவரிடம் வந்தது. அதற்கும் சாப்பாடு
போட்டுக்கொண்டிருந்தார்
ஒருநாள் பட்டினத்தார் அவரிடம், "இங்கு இரண்டு பேருமாய் இருப்பது
சரியாக இல்லை. நீர் மேலக்கோபுர வாயிலில் பிச்சை எடும். நான் இங்கேயே இருக்கிறேன்", என்றார்.
பத்திரகிரியார் அவரை விட்டுச்செல்ல மனமில்லாமல் அழுது புலம்பினர்.
ஆனால் பட்டினத்தார் சொன்னது சொன்னதுதான்.
ஆகவே பத்திரகிரியார் மேலைக்கோபுர வாசலுக்குச் சென்றார்.
சில காலம் கழித்து திருவிடைமருதூர்க் கோயிலில் இருந்த மருதீசர் ஒரு பெரியவர் உருவில் வந்து பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டார்.
பட்டினத்தார், "ஐயா நான் சன்னியாசி. கொடுப்பதற்கு என்னிடம்
ஒன்றுமில்லை. மேலைக் கோபுரவாயிலில் ஒரு சம்சாரி இருக்கிறார்.
அவரிடம் கேளும்", என்று அனுப்பிவிட்டார்.
மேலை வாயிலுக்குச் சென்ற பெரியவர் அங்கேயிருந்த பத்திரகிரியாரிடம், "இங்கேயுள்ள சம்சாரி ஒருவரிடம் பிச்சை கேட்குமாறு கீழை வாயிலில் உள்ள சித்தர் ஒருவர் என்னை இங்கே அனுப்பினார். எங்கே அந்த சம்சாரி?" என்று கேட்டார்.
பத்திரகிரியாருக்குப் பொட்டில் அடித்த மாதிரி இருந்தது. உடனே தம்முடைய பிச்சைப் பாத்திரத்தை எடுத்து அவருடன் இருந்த பெட்டை நாயின் தலையில் அடித்தார். பாத்திரமும் உடைந்தது. நாயும் இறந்தது.
மருதீசரும் மறைந்தார்.
பத்திரகிரியார் தவத்தில் மூழ்கினார்.
அந்த நாய் பத்திரகிரியாரின் எச்சிலை உண்ட புண்ணியத்தினால்
காசிராஜனின் மகளாகப் பிறந்தது.
அந்த ராஜகுமாரிக்குக் கல்யாணம் செய்யவேண்டிய சமயத்தில், அவள், "திருவிடை மருதூரில் ஒரு பெரிய சித்தர் இருக்கிறார். அவரைத்தான் நான் மணந்துகொள்வேன். அவரிடம் அழைத்துச் செல்லுங்கள்." என்று பலவாறு பிடிவாதம் பிடித்தாள்.
ஆகவே அவளைக் காசிராஜன் திருவிடை மருதூருக்கு அழைத்துச்சென்றான்.
மேலக்கோபுர வாயிலுக்குச் சென்று அங்கிருந்த பத்திரகிரியாரைப்
பார்க்கவும் அரசகுமாரி, "நாதா, என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையேல் நான் தற்கொலை செய்துகொள்வேன். ஒரு கன்னிப்பெண் சாவால் ஏற்படும் கடுமையான தோஷம் உங்களைப் பீடிக்கும்!", என்றாள்.
"மருதவாணா! இது என்ன சோதனை?" என்று அலறியவாறு பத்திரகிரியார் கோயிலுக்குள் சென்றார். நேரே கர்ப்பக்கிருஹத்துக்குச் சென்றார். அப்போது கர்ப்பகிருஹத்தில் ஒரு ஜோதி தோன்றியது. அதற்குள் பத்திரகிரியார் சென்று மறைந்தார். அரசகுமாரியும் அவரைத் தொடர்ந்து ஜோதிக்குள் சென்று மறைந்தாள். ஜோதியும் மறைந்தது.
இதை அறிந்த பட்டினத்தார், "பின்னால் வந்தவன் முன்னால் சென்று
விட்டான். மருதவாணா, இது என்ன பாரபட்சம்?" என்று ஈசனிடம் கேட்டார்.
அப்போது அசரீரியான வானொலி ஒன்று, "பட்டினத்துப் பிள்ளையாரே! என்றைக்கு உமக்குப் பேய்க் கரும்பு இனிக்கிறதோ, அப்போது உமக்கு அனைத்தும் சித்தியாகி எம்மை வந்தடைவீர்!" என்றது.
பேய்க்கரும்பு என்பது கரும்பு போன்ற தாவரம். ஆனால் மிகவும் கசக்கும்.
அதிலிருந்து பட்டினத்தார் பேய்க்கரும்பு ஒன்றைக் கையில் வைத்துக்
கொண்டு அடிக்கடி அதைச் சுவைத்துப் பார்த்துக்கொண்டிருக்கலானார்.
பேய்க்கரும்பு இனிக்கவேண்டும்.
அதற்கு முன்னால் தித்திப்புக் கரும்பு கசந்துவிடவேண்டும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Subscribe to:
Posts (Atom)