Tuesday, May 21, 2013

THE SECRETS OF THE MADURAI MAHAL-#1






திருமலை நாயக்கர் மஹால் ரகசியம் #1

 பகலிலும் சில இடங்களில் பக்கம் பார்த்துத்தான் பேசவேண்டும்.

 திருமலை நாயக்கர் மகாலின் அமைப்பில் சில விசேடங்கள்
 இருக்கின்றன.

 இந்த மகாலில் சிற்சில இடங்களில் நின்றுகொண்டு மிகவும் மெல்லிய குரலில் பேசினாலும் பல அடிகளுக்கு அப்பாலுள்ள குறிப்பிட்ட சில இடங்களில் இருப்பவர்களுக்குக் கேட்கிறது. ஆனால் சில அடிதூரத்தில் இருப்போருக்குக் கேட்கமாட்டாது. அப்படிப்பட்ட அமைப்பை வேண்டுமென்றேதான் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

 ஆனால் இந்த அமைப்பு ஒரு நாயக்க மன்னனின் உயிரைக் காப்பாற்றி
யிருக்கிறது.  சொக்கநாத நாயக்கர் என்பவர் திருமலைநாயக்கரின் 
பேரர். அவர் பதினாறு வயதினிலேயே பட்டத்துக்கு வந்துவிட்டார். 
அப்போது ராயசம், பிரதானி, தளவாய் என்னும் மூன்று உயர்தன 
அதிகாரிகளிடம்தான் மதுரைநாட்டின் உண்மையான அதிகாரம் 
இருந்தது.
 அவர்கள்தாம் சொக்கநாதநாயக்கரையும் மதுரைநாட்டையும் ஆட்டிப் படைத்தார்கள்.
 அதுவும் போதாததற்கு, சொக்கநாதரையே கொன்றுவிட சதி செய்தார்கள்.
 அவர்கள் ரகசியமாகப் பேசிய இடம் அந்த எக்கச்சக்கமான இடங்களில் ஒன்று.
 அவர்கள் பேசியதெல்லாம் சொக்கநாதரின் அந்தரங்க மெய்க்காப்பளரின்
 காதுகளில் விழுந்துவிட்டது.
 சொக்கநாதர் உடனடியாகக் counter-coup ஒன்றைச்செய்து அந்த
 மூன்று பேரையும் ஒழித்துக்கட்டிவிட்டார்.

 அதன்பின்னர் சொக்கநாத நாயக்கர் தம் உதவியாளர்களுடன் 
சுயேச்சையாக ஆள ஆரம்பித்தார்.
ஆனால் ருசி கண்ட பூனையல்லவா. ஒரு பயங்கர யதேச்சாதிகாரியாக
 மாறிவிட்டார்.

 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியகிழக்கு, துருக்கி, பால்க்கன்
 நாடுகளை உள்ளடக்கிய பைசாண்ட்டியம் என்னும் பேரரசு இருந்தது.
 அதன் தலைநகராகிய கான்ஸ்ட்டாண்ட்டிநோப்பலில் ஒரு பெரிய தேவாலயம்  ஒன்றைக்கட்டினார்கள்.
 Hagia Sophia என்னும் அந்தக் கட்டடத்தில் இந்த மாதிரி
 acoustic wonders நிறைய உண்டு. அந்தக் கட்டடமும் திருமலை நாயக்கர்  மகாலுக்கு முன்மாதிரி என்று சொல்வார்கள்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$