Sunday, December 23, 2012

WHY NO WESTERN MEDICINE WEB IN TAMIL?


Lack Of Importance (Tamil Unicode) < Prev  Next >
Posted By: Fri Sep 2, 2011 12:48 am  |

ஓராண்டுக்கு முன்னர் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி:
"நீங்கள் ஏன் மருத்துவத்தைப் பற்றி எழுதக்கூடாது?
கேள்வி-பதில்கூட சொல்லலாமே?"
இது அவ்வப்போது கேட்கப்படும்கேள்விதான்.
ரொம்ப நாட்களுக்கு முன்னரேயே ஒருவர் கேட்டதற்கு நான் கொடுத்த பதில்......

>>>>>>>>>>>>>>>>.
ஓர் அன்பர், "மருத்துவத்தைப்  பற்றி மடலாடல் குழு தமிழில் ஒன்றுகூட இல்லையே, ஏன்?",  என்று கேட்டார்.
"அலோப்ப·தியிலா அல்லது சித்தவைத்தியம், ஆயுர்வேதம் போன்றவற்றிலா?" என்று அவரைக் கேட்டேன்.
"இரண்டிலுமே பார்த்ததில்லை", என்றார்.
ஆமாம்.
இந்தத் துறைகளில் ஏதும் மடற்குழு இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது தமிழில்.
அலோப்ப·தியின் பல பிரிவுகளில் பல மடற்குழுக்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன.
பல வியாதிகளுக்கென்று தனித்தனி மடற்குழுக்கள் இருக்கின்றன. நோயாளிகள், டாக்டர்கள் ஆகியோர் பங்கு பெறும் குழுக்கள் அவை.
Alternative Medicine என்னும் பெயரில்கூட பல குழுக்கள் அலோப்ப·தி தவிர்த்த பிற துறைகளில் இருக்கின்றன.
அவருக்குப் பதில் எதையாவதைச் சொல்லவேண்டுமே.
ஆகவே சொன்னேன்:
"எல்லா அலோபதி டாக்டர்களும் ரொம்ப பிஸியா இருக்கிறாங்களோ
என்னமோ. இப்பவெல்லாம் அவுங்ககிட்ட பேசுறதுக்குக்கூட காசு
கொடுக்கணும் போல்ருக்கு. ரிட்டயர் ஆன டாக்டர் யாராவது, நீங்க சொன்னாப்புல மடற்குழு ஆரம்பிச்சாத்தான் உண்டு. இருக்கிற ஒண்ணு ரெண்டு பேரும்கூட தமிழப்பத்திய்ல எழுதிக்கிட்டு இருக்காங்க்ய.....?"
விளையாட்டுக்கு அவரிடம் அப்படிச் சொன்னேன்.
ஆனால் அது ஒரு நல்ல யோசனை.
பலருக்கு உபயோகப்படும்வகையில் அதைச் செயல்படுத்த நிச்சயம்
முடியும்.
>>>>>>>>>>>>>>>>>>>..

இதை நான் எழுதிய காலகட்டத்தில் வலைத்தளங்கள் இருந்தன. ஆனால் ப்லாகுகள் தோன்றவில்லை. ·பேஸ்புக் கூட மிக அண்மையில் தோன்றியதாயிற்றே.
மாற்று மருத்துவம் என்னும் ஆல்ட்டர்நேட்டிவ் மெட்ஸின் பற்றி தமிழ்
விக்கிப்பீடியாவில் இருக்கிறதா என்று பாருங்கள்?
தமிழில் எவ்வளவோ இல்லை.
ஆனால் தமிழில் மட்டும் 30000 ப்லாகுகள் இருப்பதாக இணையத்துப் பழம்புலி ஒருவர் சொன்னார்.
அதில் என்னுடைய ப்ன்னிரண்டு புலாகுகளையும் சேர்த்தாரா
இல்லையா என்பது தெரியவில்லை.
·பேஸ்புக்கில்மட்டும் ஐந்து லட்சம் தமிழர்கள் இருப்பதாக மலேசியாக் காரர் ஒருவர் சொன்னார். மலேசியத் தமிழர்கள் மட்டுமே  ஆயிரக் கணக்கில் இருப்பதாகச் சொன்னார். சுங்கைப் பட்டாணி தமிழர்களே
எனக்குத் தெரிந்து எண்ணூற்றுச்சொச்சம் பேர் இருக்கிறார்கள்.
எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால், "இவ்வளவு இருந்தும் மருத்துவம் என்னும் இன்றியமையாத முக்கியமான துறை¨யைப் பற்றி தமிழில் மிக மிக மிகக் குறைவாகவே இருக்கிறதே!" என்பதுதான்.

நம்ம ஆட்களின் பார்வை கீர்வை, நோட்டம், நாட்டமெல்லாமே எங்கோ சிதறிப் பாய்கின்றன.
மதுரை மருத்துவக் கல்லூரிக்காக ஒரு குறிப்பிட்ட ·பேஸ்புக்.
அதில்போய் தமிழ் வருடப் பிறப்பை மாற்றியது குறித்து காரசாரமாக ஒருவர் எழுதினார்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அதற்கு நான் எழுதினேன் -
DrJaya Barathi:
"Better to confine the dealings to our college, college life, professors, outstanding medicos, post-studies experiences/adventures, and good old Madurai.
Better refrain from topics like new year. There are other FaceBook venues, blogs, discussion groups, etc, for such topics".
August 29 at 12:25pm

Madurai Medicos and 5 others like this.

Ranjith Veeramani:
"Aaanalum neenga romba strict a irukeenga sir . .!"
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஆமாம்.... பாருங்கள்....... கல்லூரி, கல்லூரி வாழ்க்கை, மருத்துவப் படிப்பு, படித்தபின் ஏற்படும் அனுபவங்கள், வேலை வாய்ப்புக்கள், மதுரை, மறக்கப்பட முடியாத மாணவர்கள்/ஆசிரியர்கள்......

இப்படி எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.
ஒரு சில டாக்டர்கள் ஒரு கூட்டமைப்பாக வைத்துக்கொண்டு மருத்துவ விளக்கங்கள் ஆலோசனைகள் ஆகியவற்றையும்கூட கொடுக்கலாம்.
நோயாளிகள் ஏமாறாமல் இருப்பதற்கு உதவியாக இருக்கலாம், அல்லவா.
இதற்கென்று விஜயகாந்த் விஜிலன்ஸ் வரவேண்டுமா, என்ன


 $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$